உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் அருளிச் செயல்கள் 157



கூறிப்பெற்றுள்ளது (26-31). இங்ஙனம் பலவகைப் பிறப்புகளிலும் பிறந்துழன்று துய்மையடைந்த நல்லுயிர்கட்குத் திருவடிப்பேறு நல்கி அவ்வுயிர்களை ஆட்கொண்டருளுதலும், அறிவு நூல்களாகிய திருமறைகளாலும் உணர்தற்கரிய அப்பரம்பொருள் உயிர்களின் நலங்கருதிப் படைத்தல், காத்தல், ம்றைத்தல, அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் இயற்று முகமாக உயிர்களின் அறியாமையை அகற்றித் தூய்மை செய்து பேரின்பம் நல்கிப் பிறவி வேரறுக்கும் பெற்றியும், தாயிற்சிறந்து அருளாளனாகிய இறைவன் எல்லாமாய் அல்லவுமாய் நிற்கும் இயல்பும், தில்லைக் கூத்தனாகிய அவ்விறைவன் திருவடிகளை நெஞ்சம் நெக்குருகிப் பணிந்தேத்திப் பரவிய திருப்பாட்டின் பொருளுணர்ந்து சொல்லும் மெய்யடியார்கள் பல்லோரும் போற்றச் சிவனடிக்கீழ் வைகும் பேரானந்தப் பெருவாழ்வு எய்தி இன்புறுவர் என்பதும் ஆகிய உண்மைகள் இப்புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளன.

இப்புராணத்திற்குக் குறிப்பெழுதிய பெரியார் ஒருவர் "சிவனது அநாதி முறைமையான பழமைதான் சிவனது அருவநிலை கூறுவதாகும்" என்றார். இறைவன் கருணையால் உருவு கொள்ளுமிடத்துக் காலத்தொடுபட்ட பழமையே சித்திக்கும் என்பதை நாம் அறிவோம். ஆகவே, காலங் கடந்த பழமையாகிய அருவநிலையை நாதன் (i), குருமணி (3), ஏகன் (5), ஈசன் (11), தேசன் (12) முதலான இறைவனுடைய உண்மை இலக்கணத்தால் உணர்த்துகின்றார். "ஈசர் தமக்கியல்பான திருநாம முதலெவையும், மாசறவே வாழ்கவென வாழ்த்துகின்ற அருட் குறிப்பு உடைய"தெனக் கூறுவர் (திருப்பெருந்துறைப் புராணம்).

மங்கலச்சொல் யாவற்றிற்கும் தலையாயதும், தான் மங்கலமாதலேயன்றித் தன்னைச் செபிப்பார்க்கும் தியானிப்