இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பிற இடங்களில் அருளிச் செயல்கள் 161
சதகத்தை அடுத்து நீத்தல் விண்ணப்பம் நூலில் அமைத் திருப்பது மிகப்பொருத்தமாகின்றது. இந்தப் பனுவலின்,
கடையவனேனைக் கருணையி னாற்கலக் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின் றோல் உடையவனேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேனெம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே (1)
(கலந்து - உள்ளும்புறமும் கலந்து; விடையவன் - இடபவாகனன்: விறல் வேங்கை-வலிய புலி).
என்பது முதல் பாடல். இதில் "யாவர்க்கும் கடையேனாகவுள்ள எளியேனை நினது பெருங்கருணைத் திறத்தால் உளங்கலந்து நின்று ஆண்டு கொண்டருளிய ஏறுார்ந்த செல்வனே, அடியேனை இத்துயர் நிலையில் கைவிட்டு விடுவாயோ? வளம்மிக்க புலியின் தோலை உடையாகக் கொண்டவனே, நிலைபெற்ற திருவுத்தரகோசமங்கையைத் தலைநகராகக் கொண்டு வீற்றிருந்தருளும் வேந்தனே, செஞ்சடைக் கடவுளே, அடியேன் பெரிதும் தளர்வுற்றேன்; எம்பெருமானே, தளர்ச்சி நீக்கி அடியேனை தாங்கிக் காத்தருள்வாயாக’ என்று இறைவனைப் பரிந்து வேண்டு கின்றார்,
பெருநீ ரறச்சிறு மீன்றுவண் டாங்கு நினைப்பிரிந்த வெருநீர்மை யேனை விடுதிகள் டாய்வியன் கங்கைபொங்கி
மா-11