பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162 மாணிக்கவாசகர்



  வருநீர் மடுவுண் மலைச்சிறு
     தோணி வடிவின்வெள்ளைக் 
  குருநீர் மதிபொதி யுஞ்சடை
     வானக் கொழுமணியே (26) 

என்பது 26-ஆம் பாடல். "நீரற்ற குளத்தில் சிறு மீன் துவண்டதுபோல, தேவரீரைப் பிரிந்த யான் வாடினேன்; என்னை விடாதீர்' என வேண்டுகின்றார்.

  தாரகை போலும் தலைத்தலை
     மாலைத் தழலரவப்பூண் 
  வீரவென் றன்னை விடுதிகண்
     டாய்விடி லென்னைமிக்கார் 
  ஆரடி யார்என்னின் உத்தர 
     கோசமங் கைக்கரசின் 
  சீரடி யாரடி யான் என்று
     நின்னைச் சிரிப்பிப்பனே (48) 

(தாரகை - விண்மீன்; சிரிப்பிப்பன் - நகைக்கும்படி செய்வேன்.)

என்பதில் தலை மாலையையும் பாம்பணியையும் ஆண்ட வீரனே! என்னை விடாதே’ என்கிறார். மேலும்,

  சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத்
     தொழும்பையு மீசற்கென்று 
  விரிப்பிப்பன் என்னை விடுதிகண்
     டாய்விடின் வெங்கரியின் 
  உரிப்பிச்சன் றோலுடைப் பிச்சனஞ்
     சூண்பிச்ச னுர்சுடுகாட் 
  டெரிப்பிச்ச னென்னையு மாளுடைப் 
     பிச்சனென் றேசுவனே (49) 

(பிச்சன் - பித்தன்; தோல் - புவித்தோல்; நஞ்சுஊண் - நஞ்சாகிய உணவு)