பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 மாணிக்கவாசகர்



எனவும், 'விடாமல் எனை ஆண்டருள் எனவும் இயைத்து இப்பனுவலில் அமைந்த இருவகை விண்ணப்பங்களையும் ஒருங்கு சுட்டி நிற்றலை அறியலாம்.

வாதவூரடிகள் உத்தரகோச மங்கை வந்ததும் 'அட்டமா சித்திகள்” 2 என்ற கலைகளில் இறையருளால் வல்லுநராகின்றார். அடிகள்,

  பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங் 
  கட்டமா சித்தி அருளிய வதுவும்.
                             -கீர்த்தித் 62 - 63.

என்று குறிப்பிடுவதால் இறைவனே இவற்றை அடிகட்கு உபதேசித்தார் என்பதை அறிய முடிகின்றது. அன்றியும் அடிகளின்,

  உத்தர கோச மங்கையுள் ளிருந்து 
  வித்தக வேடம் காட்டிய இயல்பும்
                            -கீர்த்தித் - 48 - 49. 

என்ற குறிப்பினால் திருப்பெருந்துறையில் தம்மை ஆட் கொண்டபோது காட்டிய குருவடிவத்தையே காட்டினமையையும் அறிய முடிகின்றது. வித்தக வேடம் - ஞானத் திருவுரு. மணிவாசகப் பெருமான் திருவுத்தர கோசமங்கை யினின்றும் புறப்பட்டுத் தில்லையை நோக்கி வருகின்றார்.


2. அட்டமாசித்திகள் அணிமா - மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் - என்பன. இவற்றுள் அணிமா . ஆன்மாவைப் போல் அணுவாதல், மகிமா - மகத்தாதல். கரிமா - தன்னுடல் கண்டிப்பின்றாய்க் கண்டிப்புள்ளவற்றை யுருவவல்லனாதல். இலகிமா - இலகுத்துவம்மாதல் பிராப்தி - வேண்டுவன அடைதல். பிராகாமியம் - நிறையுள்ளானாதல், ஈசத்துவம் -ஆட்சியுளனாதல் வசித் துவம் - தன்வசமாக்க வல்லவனாதல்.