பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 மாணிக்கவாசகர்



(படிமப் பாதம் - தெய்வத் தன்மை வாய்ந்த திருவடி)

என்ற அடிகளாலும்,

  அந்த இடைமருதில்
     ஆனந்தத் தேனிருந்த 
  பொந்தைப் பரவிநாம்
     பூவல்லி கொய்யாமோ? (276)

என்ற அடிகளாலும் அறிய முடிகின்றது. இச்செய்தியைக் கடவுள்மா முனிவரும் தமது புராணத்தில் குறிப்பிடுவர். இங்குள்ள இலிங்கமே இத்தலத்தின் சிறப்புக்குக் காரண்ம். பெயர் பெற்ற இந்த மூர்த்தி மகாலிங்கம் என்ற பெயரால் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு ஈசுவரன் திருக்கோயிலிலும் கணபதி, சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, நந்திகேசுவரர், நவக்கிரகங்கள் முதலிய தேவர்களின் திருமேனிகள் வைத்திருப்பதைக் காணலாம். இடைமருதூர் திருக்கோயிலில் இவை இடம் பெற்றிருப்பதுடன் இவ்வூரைச் சுற்றியுள்ள தலங்களில் இவர்கட்குத் தனித்தனிக் கோயில்கள் கட்டப் பெற்றிருப்பதையும் காண மு டிகின்றது. திருவலஞ்சுழி 5 கணேசப் பெருமானுக்குத் தனிச் சந்நிதி உண்டு. சுவாமி மலை 6 முருகன் பெரும் புகழ் பெற்றவன். கட்டு மலைக் கோயிலில் உள்ள இப்பெருமானை அருணகிரியார்


5. திருவலஞ்சுழி: மயிலாடுதுறை - தஞ்சை இருப்பூர்தி வழியில் சுவாமிமலை என்ற நிலையத்திலிருந்து 1/2 கல் தொலைவிலுள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. இங்கிருந்து போவதே வசதி. இத்தலத்துப் பிள்ளையார் சந்நிதிமிகு புகழ் வாய்ந்தது.

6. சுவாமி மலை கும்பகோணத்திற்கருகிலுள்ள ஓர் இருப்பூர்தி நிலையம். கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. இங்கிருந்து ‘சுவாமிமலை’ என்ற தலத்திற்குப் போவதே சிறப்பு.