பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168 மாணிக்கவாசகர்



தங்கள் நோய்களை அகற்றிச் செல்வது இன்றளவும் வழக்கமாய் இருந்து வருவதைக் காணலாம். இதைத்தான் மக்கள் சோழ பிரம்மஹத்தி என்று வழங்குகின்றனர். மணிவாசகப் பெருமான் செல்லும் திருத்தலங்களி லெல்லாம் திருப்பெருந்துறைவில் ஆட்கொண்ட ஆசிரியத் திருமேனியைக் காட்டியே அவரை மகிழ்விக்கின்றார். திருவிடைமருதூரிலும் அந்தப்பாதக்காட்சியையே பெறுகின்றார். இதையே மேற்காட்டிய அடிகளில் குறிப்பிடுகின்றார். இடை மருதூரிலிருந்து திருவாரூருக்கு வருகின்றார். மணிவாசகப் பெருமான். இதனை,

  தேனமர் சோலைத் திருவாரூரில்
  ஞானம் தன்னை நல்கிய தன்மையும்
                             -கீர்த்தித் 73-74 

என்ற அடிகளின் வாக்காலேயே அறியலாம். இந்த ஊரில் தான் திருப்புலம்பல் (39) என்ற பனுவல் பிறக்கின்றது.


34. திருப்புலம்பல் (39)

திருவாரூரில் அருளிச் செய்யப் பெற்ற இப்பனுவல் மூன்று திருப்பாடல்களைக் கொண்டது.


8. திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பெற்றதாகக் கடவுண்மா முனிவர் கருதுவர்.

9. ஆரூர்: மயிலாடுதுறை-காரைக்குடி இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. கச்சி ஏகம்பத்தையும் பஞ்சபூதத் தலங்களுள் பிருதிவித்தல மாகக்கருதுவதுண்டு. சந்நிதிக்குத் தெற்கே தனிச் சந்நிதியாகவுள்ள தியாகராசர் சந்நிதி மிகுபுகழ் வாய்ந்தது, திருமூலட்டானத்தின் பெயர் பூங்கோயில் என்பது தலம் மூர்த்தியின் சிறப்புக்கு ஒத்த சிறப்புடையது. சோழ மன்ன்ர்கள் முடிசூட்டு. விழா கெர்ண்டாடிய 5 நகரங்களுள் ஒன்று. ஏயர்கோன் கலிக்காமர், கர்டவர்கோன் கழற் சிங்கர், செருந்துணையார், தண்டியடிகள், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நமி நந்தியடிகள், விறன்மிண்டர் முதலிய நாயன்மார்கள் வாழ்க்கைத் தொடர்புடைப் தலம். சுந்தரர்-பரவையார் வாழ்க்கைச் சிறப்புடைய அற்புதத் தலம். 9,