பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற இடங்களில் அருளிச் செயல்கள் 171


 தம்பிரான் தோழர் எனப்படும் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியது இத்திருத்தலத்தில்தான். தில்லை வாழ்ந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" (7.9 : 1) என்பது முதற் பாடலின் தொடக்கம். இதுதான் சேக்கிழார் பெருமானுக்கு பெரியபுராணம்’ பாடுவதற்கு வழி யமைத்துத் தந்தது. திருவாரூர் வந்த அடிகட்கு (அவர் மூவருக்கும் பிற்பட்டவராக இருந்திருந்தார்) சுந்தரர் பரவையாரை மணந்ததும், அவர்பொருட்டு இரவில் தூது போதுமான நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்திருப்பர். அடியார் பொருட்டு இறைவன் படுகின்ற பாட்டைக் கேட்டு மனம் நெகிழ்ந்து கண்ணிர் உகுத்திருப்பர்.

திருவாரூர் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று என்பதை நாம் அறிவோம். 'விடங்கர் என்பது கை புனையாது தானே தோன்றிய வடிவம். கல்லுளியால் பொளியப் பெறாத சுயம்பு மூர்த்தி என்பது இதன் பொருள். சோழமன்னர்களில் முன்னோன் முசுகுந்தச் சக்கரவர்த்தி. இவன் இந்திரனுக்குச் செய்த ஓர் உதவிக்குப் பதிலாகத் தியாகராச விடங்கமூர்த்தி கள் ஏழிடங்களில் ஏற்பட்டன. இந்த இடங்கள் திருவாரூர், நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருக்காறயில், திருக்கோயிலி, திருவாய்மூர், வேதாரண்யம் என்பவை யாகும். ஒவ்வோரிடத்திலும் சிவபெருமானின் வெவ்வேறு விதமான நடன உருவங்கள் காட்டப் பெற்றுள்ளன. திருவாரூர் திருக்கோயிலின் வெளிச்சுற்றில் ஏராளமான இலிங்கங்களைக் கண்டு மகிழலாம். இக்கோயில் சிற்பங்களுக்கும் பெயர் போனது. இத்திருத்தலத்தில் அடிகள் பெற்றது ஞானிசித்தியாகும். உவ்வூருக்குப் புறம்பே சுமார் ஒரு கல் தொலைவில் உள்ள தட்சிணாமூர்த்தி மடம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. என் அறிய நண்பர் திரு. பா. அரங்கசாமி ரெட்டியார் (திருச்சி வழக்குரைஞர்) சில ஆண்டுகட்கு முன்னர் நடைபெற்ற மடத்துத் திருப்பணியில் பெரும்பங்கு கொண்டிருந்தது நினைவுக்கு வருகின்றது.