பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172 மாணிக்கவாசகர்



திருவாரூரிலிருந்து தில்லையை நோக்கி வரும் மணிவாசகர் கழுமலம் 10 என்ற தலத்திற்கு வருகின்றார். இதனை,

  கழுமல மதனில்
     காட்சி கொடுத்தும் 11

என்ற அடியால் அடியலாம். இந்தப் பழம்பதியில்தான் பிடித்தபத்து என்ற மனுவலை அடிகள் அருளியதாக திருவாதவூரர் புராணம் செப்புகின்றது.


35. பிடித்த பத்து (37)

இது திருத்தோணிபுரத்தில் அருளிச் செய்யப் பெற்ற தெய்வப் பனுவல். எல்லாத் திருவாசகப் பதிப்புகளிலும் தோணிபுரம் என்ற குறிப்பே காணப்பெறுகின்றது. தோணிபுரம் என்பது சீகாழி. இத் திருத்தவத்துக் கோயில் பிறகோயில்களினின்றும் சற்று வேறுபட்டது. மூலதானத்த மூலவர் இலிங்க வடிவமான இரம்மபுரீஸ்வரர். கருவறையின் விமானம் இரண்டு கட்டு களைக் கொண்டது. இரண்டாவது கட்டு மலை என்று


10. கழுமலம் (சீகாழி) விழுப்புரம்-கடலூர்-மயிலாடுதுறை இருப்பூர்தி வழியிலுள்ள சீகாழி இருப்பு நிலையத்திலிருந்து 1 கல் தொலைவிலுள்ளது. திருக்கோயில். ஞானசம்பந்தர் அவதரித்த தலம், இத்தலத்தில் கனநாத நாயனார் பயிற்சிக் கல்லூரி வைத்துத் தொண்டரை ஆக்கும் தொண்டு புரிந்துவந்தனர். பாடல் பெற்ற தலங்களில் இத்தலமே மிகுதியான பாடல்களைப் பெற்றுள்ளத். இத்தலத்திற்குப் பன்னிரண்டு பெயர்கள் உண்டு, அவை; கழுமலம், காழி, கொச்சைவயம், சண்டைநகர், சிரபுரம், தோணிபுரம், பிரமபுரம், புகலி புறவம், பூந்தராய், வெங்குரு, வேணுபுரம் என்பவை. இவற்றின் காரணங்கள் அருணாசல கவிராயர் இயற்றி யுள்ள தலபுராணத்தில் தரப்பெற்றுள்ளன.

11. கீர்த்தித்திரு - அடி. 78. 12. ஆலவாயில் அருளிச் செய்யப்பெற்றதாக நம்பி திருவிளையாடல் குறிப்பிடும்.