பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174 மாணிக்கவாசகர்



பிடித்தேன்’ என்ற துணிவு உரைத்தல் பிடித்த பத்தாம்’ என்று திருப்பெருந்துறைப் புராணம் கூறும். இப்பதிகத்தில்,

  அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
     அன்பினில் விளைந்தவா ரமுதே 
  பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
     புழுத்தலைப் புலையனேன் றனக்கு 
  செம்மையே யாய சிவபதம் அளித்த
     செல்வமே சிவபெரு மானே 
  இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுந் தருளுவ தினியே (3)

(அன்பு - அன்பாகிய பாற்கடல்; பொய்ம்மை - பயனற்ய செயல்கள்: புலையன் - இழிதகைமையுடையவன்; செம்மை -நேர்மை)

  பால்நினைக் தூட்டும் தாயினும் சாலப்
     பரிந்து பாவியே னுடைய 
  ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
     உலப்பிலா ஆனந்த மாய 
  தேனினைச் சொரிந்து புறம்புறக் திரிந்த
     செல்வமே சிவபெரு மானே 
  யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
     எங்கெழுங் தருளுவ தினியே (9) 

(உவப்பு - அறிவு; புறம்புறம் திரிந்த காக்கும் பொருட்டுத் தாயைப் போல நாலாபக்கங்களிலும் திரிந்த)

என்பன மூன்றாம், ஒன்பதாம் திருப்பாடல்கள். எல்லாப் பாடல்களும் 'சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந்தருளுவ தினியே என்று இறுகின்றன. எல்லாப் பாடல்களும் பக்திச் சுவை விஞ்சி நிற்பன; பாடியவாய் தேனுாறும் பான்மையுடன்