பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற இடங்களில் அருளிச் செயல்கள் 177



வருகின்றார் வாதவூரடிகள்: உமாதேவியார் வெண்ணெயினால் கோட்டை கட்டி அதனிடையே பஞ்சாக்கினியை வளர்த்துத் தவம் புரிந்த காரணத்தால் 17 திருவெண்ணெய் நல்லூர் என்ற பெயர் பெற்றதாக ஒரு கதை வழங்குகின்றது. திரு வெண்ணெய் நல்லூர் என்ற பெயரைக் கேட்டவுடன் மூன்று நிகழ்ச்சிகள் நினைவிற்குவராமல் போகாது. சிவபெருமான ஒரு கிழவேதியர் வடிவுகொண்டு வந்து ஒர் ஆவணப் பழவோலையைக் காட்டி.சுந்தரரின் மணத்தைக் கெடுத்து ஆட்கொண்ட நிகழ்ச்சி இந்நிகழ்ச்சி மணிவாசகரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்க வேண்டும்; இறைவனுடைய கருணை வெள்ளத்தை எண்ணி எண்ணி இரும்பூது அடைந்திருக்கவேண்டும். மணிவாசகர் காலத்திற்குப் பிறகு நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளுள் ஒன்று, கம்பன் சடையப்ப வள்ளலின் ஆதரவால் இராமகாதையை அருளிச்செய்தது (11-ஆம் நூற்றாண்டு); மற்றொன்று, சைவசித்தாந்த சாத்திரமாகிய சிவஞானபோதம் என்ற முதல் சாத்திரத்தை அருளிச் செய்த மெய்கண்டதேவரின் சிவத்தொண்டு. (13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி). பன்னிரண்டு சூத்திரங் களாலான சிவஞான போதத்திற்கு விருத்தியாக ஏற்பட்டது சிவஞான சித்தியார். இதை எழுதியவர் மெய்கண்டாரின் மாணாக்கர் அருணந்தி சிவாச்சாரியார். திருவெண்ணெய் நல்லூரில் திருக்கோயிலுக்கு மேற்கே தெருவோரத்தில் மெய்


  இடம் "வழக்கு வென்ற அம்பலம்" என்று கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது. இது திருக்கோயில் கோபுரவாயிலுக்கு எதிரிலுள்ள 100 கால் மண்டபம். 

17. பஞ்சாக்கினி தபசு - நான்குபக்கமும் தீ மூட்டி வைத்தும், தலைக்குமேல் பகலவன் வெப்பம்படும் படி செய்தும் புரியும் தவம். இஃது அசுர தபசு.

மா - 12