பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 மாணிக்கவாசகர்



கண்டார் பெயரில் ஒருமடம் ஏற்பட்டுள்ளது. திருவெண்ணெய் நல்லூரில் மணிவாசகர் எந்தத் திருவாசகப் பதிகமும் பாடியதாகத் தெரியவில்லை. திருவெண்ணெய் நல்லூரிலிருந்து திருவண்ணாமலைக்கு வருகின்றார் மணிவாசகப் பெருமான். இங்கு சில நாட்கள் தங்கி அண்ணாமலையானை வழிபடுகின்றார்.

  அண்ணா மலையெம் அண்ணா போற்றி
  கண்ணா ரமுதக் கடலே போற்றி 
                        -போற்றித்திரு. அடி 149-150

என்று வழிபட்டுக் கொண்டு கச்சி ஏகம்பத்திற்கு வருகின்றார். காஞ்சித் தலத்தைப் பற்றி,

  தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
     திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
                                  -திருப்பொன். 4

18. இங்கு அருளிச் செய்த இரண்டு பனுவல்கள் பற்றிய விவரங்களைத் தனிக் கட்டுரையில் (கட்டுரை.10) விளக்குவோம். 19. கச்சி ஏகம்பம் (ஏகாம்பரேசுவரர் கோயில்) : இது காஞ்சி இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்து மூலம் செல்வதே ஏற்றது. என்றும் அழியாத மாவடியின்கீழ் இறைவன் இருத்தலால் (ஏக-ஆம்ரன்=ஒருமாவின்கீழ் இருப்பவன்) ஏகாம்பரன் ஆயினன். காஞ்சிப்பதியிலுள்ள எல்லாச் சிவாலயங்களும் தேவார வைப்புத்தலங்களே: காஞ்சியிலுள்ள எந்தச் சிவாலயத்திலும் அம்மன் சந்நிதி இல்லை. இவ்வாலயங்களிலுள்ள சிவபெருமானுக்கு அம்பிகை காமாட்சி அம்மையாகத் தனிக்கோயிலில் உள்ளார். இவர் இரு நாழி நெல் கொண்டு 32 அறங் களை வளர்ப்பவர். காஞ்சியிலுள்ள இராஜ வீதிகள் போல் அகன்ற மாடவீதிகள் வேறு எந்தத் தலத் திலும் இல்லை. ஏழு திருமுறைகளிலும் கச்சி ஏகம்பனுக்குப் பதிகங்கள் உண்டு.