பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற இடங்களில் அருளிச் செயல்கள் 183



(பிணக்கு - மாறுபாடு: இணக்கு இலாத - ஒப்பற்ற: உணக்கு இலாததோர் வித்து-காயாத பிறவி விதை)

என்பது முதற்பாடல். காய்ந்து உலர்தல் இல்லாத நிலையில் உயிரோடு ஒற்றித்துள்ள ஆணவ மலமாகிய விதை மேல் விளைவெய்தித் துன்பங்களைப் பெருக்காதவாறு வறுத்த வித்துப்போல் ஆற்றல் குறைந்தடங்க, இருவினையொப்பு எய்த இறைவன் தம்மை ஆட்கொண்டருளிய செய்தி இதில் எடுத்துரைக்கப்படுகின்றது. ஈண்டு'உணக்கிலாததோர்வித்து’ என்றது காய்ந்து உலர்தல் இல்லாத நிலையில் உயிர்களுடன் ஒற்றித்துள்ள ஆணவமலமாகிய விதையினை, மேல் விளையாமல் வினை ஒத்தலாவது, ஆணவமலமாகிய அவ்விதை வறுத்த வித்து போல் முளைக்கும் ஆற்றல் கெட்டு அடங்க, உயிர் இன்பதுன்பங்களை ஒன்றாக ஏற்று நுகரும் இருவினை யொப்பு அடங்கப் பெறுதல்.

சிவபெருமான் மதுரையில் தன்னை அன்பினால் வழி பட்டுப் பரவி வந்தி என்னும் செம்மனச் செல்வியின் பொருட்டு அவ்வம் மையார் தந்த பிட்டினைக் கூலியாகப் பெற்று மண் சுமந்த அருட்செய்தி

(2) இறைவன் தனது கலக் கத்தைமாற்றிக் கண்ணிர்துடைத்து அருள் சுரந்த பெருமை

(3), திருப்பெருந்துறையில் பிறவிப் பெருங்கடலைக் கடத் தற்கரிய தோணியாகத் தமக்கு வாய்த்த பெற்றி

(4) கொழுநனே சிவன் எனக் கொண்டு போற்றும் வண்ணம் பேதமில்லதோர் கற்பளித்த பெருமை

(6), இறைவன் தன்னை வழிபட்ட இயக்கிமார் அறுபத்து நால்வரும் தன் அருட்பண்பாகிய எண் குணங்களையும் பெற்றுத் திருவினராய் விளங்கச் செய்தருளிய சீர்த்தி

(7) ஆகியவற்றை அடிகள் இத் திருப்பதிகத்தில் உளமுருகிப் பரவிப் போற்றியுள்ளமை நினைக்கத்தக்கவை. பாடல்களை உள்ளமுருகிப் படித்து அதுபவித்தால் இக்காட்சிகள் மனத்திரையில் அமைந்து நம்மைப் பக்தியின் கொடுமுடியை எட்டச் செய்யும்,