பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 மாணிக்கவாசகர்



தொடரை இடைவிடாது நினைவு கூர் தற்பொருட்டு ஒவ்வொரு பாடல் இறுதியிலும் ஏலோரெம்பாவாய்' என்ற தொடரை அடிகள் அமைத்தருளியுள்ளனர். இதில் ஏலும், ஒரும் அசைகள், பாவாய் - விளி; பாவை நோன்பு நோற்கும் பெண்கள் "பாவை" எனப்பெற்றனர். இது தொண்டர், தொழும்பர், பணியாளர் என்னும் பெயர்கள் போன்றதாகும். இது வினையாலணையும் பெயர். பிறப்பால் வரும் பெயர் சிறப்புடையது. உருவினைப் பொறுத்தது பிறப்புப் பெயர்: உணர்வினைப் பொறுத்தது சிறப்புப் பெயர்.

திருவெம்பாவைக்குச் "சக்தியை வியந்தது” என முன்னோர் கருத்துரை குறிப்பர். சக்திகளாவார் :

1. அம்பிகை 5. உமை

2. கணாம்பிகை 6. பராசக்தி

3. கெளரி 7. ஆதிசக்தி

4. கங்கை 8. ஞானசக்தி

9. கிரியா சக்தி

என ஒன்பதின்மர் எனவும்,

1. மனோன்மணி 5. கலவிகரணி

2. சர்வபூததமனி 6. காளி

3. பலப்பிரமதனி 7. இரெளத்திரி

4. பலவிகரணி 8. சேட்டை

9. வாமை

என ஒன்பதின்மர் எனவும் வெவ்வேறு பெயரிட்டு வழங்குவர். இச்சக்திகளுள் முன்னின்றவர் பின்னுள்ளவர்களை எழுப்பி முறையே உலகத்தோற்றமும், நிலையும், நீக்கமும் ஆக்கமுறச் செய்யும் அருளிப்பாட்டின் திருக்குறிப்புகள் முதல் எட்டுத் திருப்பாட்டுகளாகும். இங்ங்னம் ஒரு சக்தி ஒரு சக்தியை எழுப்புதலே திருவெம்பாவையின் தத்துவக் கருத்தாகும்,