பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை அருளிச் செயல்கள் 189


 அழகன் ஒருவனைத் தனக்குக் கணவனாகப் பெறவேண்டும் என்பது ஒவ்வொரு மகளுக்கும் இயற்கையாகவே எழும் விருப்பமாகும். இவ்விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக நோற்கப்படும் நோன்பே பாவைதோன்பாகும். எல்லாம் வல்ல இறைவனுடைய திருவருளைச் சக்தி என்றும், அவனுடைய திருவடி என்றும் சரித்திரங்கள் பேகம். இச்சக்தியைக் கெளரி என்ற பெயரால் வழிபட்டுத் தனக்குச் சிறந்த நாயகனை அருள வேண்டும் என்று இந்த நோன்பு நோற்கும் காலத்தில் ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் அச் சக்தியை வேண்டிக் கொள்ளுவாள். இதற்காக அவள் வைகறைப் பொழுதில் துயிலுணர்ந்து எழுந்து கொள்ள வேண்டும்; பிறகு தூய நுண் மணலால் கெளரியின் உருவம் செய்து வைத்துப் பூசிக்க வேண்டும். இவ்வாறு பத்து நாட்கள் நோன்பு நோற்றால் கெளரியினிடமிருந்து அவள் விரும்பிய பயனைப் பெறலாம்.

திருப்பாவை பிறந்த கதை வேறு. பெண்மைக்குரிய காதலைத் தெய்வக் காதலாக்கியவள் ஆண்டாள். அவளது தூய்மையான உள்ளத்தில் ஊற்றெடுத்த காதல்தான் திருப்பாவை’ வடிவம் பெற்றது. சிறுவயது முதற் கொண்டே கண்ணனையே தன் நாயகனாக அடைய வேண்டும் என்ற கருத்து இவள் உள்ளத்தில் கருக்கொண்டு வளர்ந்து வருகின்றது. அந்தக் காதலனை எப்படியும் அடைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம் இவள் இதயத்தில் அணையாத விளக்காக எரிந்து கொண்டுள்ளது. அந்தக் காதலனை மறக்கவும் முடியவில்லை; அவனை விட்டுத் தப்பிப் போகவும் முடியவில்லை. அந்த அழகுத் தெய்வம் இவளுடைய அகக்கண்ணுக்குத் தரிசனம் ஆகவில்லை. அந்த அவதார காலத்தில் தான் பிறக்கவில்லையே என்று ஏங்கு கின்றாள். இது முடியக் கூடிய செயல் என்று அவளுக்குத்