பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பும் வளர்ப்பும்

3


 ஒன்று எக்காரணத்தினால் தவறி விட்டாலும் ஏரி வறண்டு மழை குன்றி வேளாண்மைக்குக் குந்தகமாய் விடும் என்று இன்றும் மக்கள் நம்புகின்றனர்.

இந்தத் திருவாதவூரில் மானமங்கலத்தார் என்று வழங்கப்பெறும் தொன்மை வாய்ந்த ஆமாத்தியர் வேதியர் குலத்தில் வந்தவர் சம்புபாதாசிருதயர்; இவர் வாழ்க்கைத் துணைவியார் சிவஞானவதியார். இப்பெயர்களைத் திருப் பெருந்துறைப் புராணத்தால் அறிய முடிகின்றது. இவர்களின் தவப்பயனாலும் இறையருளாலும் ஒரு மகன் பிறக்கின்றார். இவர் பிறப்பைப் பற்றிப் பரஞ்சோதியார்,

ஆயவளம் பதியதனின்
     அமாத்தியரில் அருமறையின் 
தூயசிவா கமநெறியின்
     துறைவிளங்க வஞ்சனையான் 
மாயன்இடும் புத்தஇருள்
     உடைந்தோட வங்தொருவர் 
சேயஇளம் பரிதியெனச்
     சிவனருளால் அவதரித்தார்.” 2

என்று கூறுவர். வேத நெறியும் சிவாகம நெறியும் விளங்கு வதற்காகவன்றி புறச்சமயமாகிய புத்த இருள் சிதறி ஒடுவதற்காகவும் இப்பிள்ளை அவதரித்திருப்பதாகச் செப்பி இருப்பது காண்க. இப்பிள்ளைக்குப் பெற்றோர் இட்ட பெயர் திருவாதவூரர் என்பது. திருவாதவூரர் எனுந் திருநாமம் தரித்தார்கள் என்று திருவாதவூரடிகள் புராணத்தில் கடவுண்மாமுனிவர் கூறுவதால் அறியலாம். ‘ஆரூரர்’ என்ற பெயர் திருவாரூரில் கோயில் கொண்டருளிய சிவபெருமானுக்குரிய பெயர். இத்திருப்பெயர் திரு நாவலூரில் தோன்றிய சுந்தரமூர்த்திக்கு இடப்பெற்று--------------------------------------------------------------------------

2. பரஞ்சோதி. வாதவூரடிகட்கு...4,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/21&oldid=1018968" இலிருந்து மீள்விக்கப்பட்டது