பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 மாணிக்கவாசகர்


என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. மார்கழி மாதத்தில் கதிரவன் தோன்றுவதற்கு முன்னர் மகளிர் நீராடி தேவி வழிபாடு செய்து நோற்கும் நோன்பு குறித்துச் சைவர்களால் ஒரு தத்துவம் கூறப் பெறுகின்றது. "மக்களுக்கு ஓராண்டு வானோர்க்கு ஒருநாள் என்ற கருத்துப்படி மார்கழித் திங்கள் வானோர்க்குரிய வைகறைப் பொழுதாகக் கருதப்படுகின்றது. இந்தக் காலம் படைப்புக்கு ஏதுவாக இருக்கும். இக்காலத் தில் மனோன்மணி முதல் வாமை ஈறாகவுள்ள நவசக்திகளும் ஒருவரையொருவர் பிரேரிக்க அநந்ததேவராலே அசுத்த மாயை காரியப்பட்டு மண்ணீறான பிரபஞ்சங்கள் உண்டாகும். இங்ஙனம் ஒரு சக்தி ஒரு சக்தியை எழுப்புதலே திருவெம்பாவையின் தத்துவக் கருத்தாகும்.

வைணவர்கள் பகவத்கீதையில் கண்ணன் தன்னை மாதங்களில் மார்கழி யாகக் கூறியிருப்பதைத் தத்துவமாகக் கொண்டுள்ளனர். ‘சிறந்த பொருள்களிளெல்லாம் சிறந்த பொருள் பரம் பொருளாகிய நானே' என்று கூறிய கண்ணன் கூற்றை ஆதாரமாகக் கொண்டுதான் வைணவர்கள் மார்கழி மாதத்தைச் சிறப்பாக மதிக்கின்றனர் என்று கொள்ள வேண்டியுள்ளது.

மூன்றாவதாக பாகவதத்தில் தசமஸ்கந்தத்தில் 21-ஆம் இயலில் கண்ணன் கோபியரின் துயில் கவர்ந்த வரலாறு கூறப்பெறுகின்றது. அதில் மார்கழி நோன்புபற்றிய முக்கியமான செய்திகள் வருகின்றன. மகளிர் மார்கழி மாதத்தில் காத்தியாயணி விரதம் தொடங்கி அத்தேவியின் உருவம் அமைத்து ஒருமாத காலம் பூசை செய்துவரும் வழக்கம் இருந்துவந்ததாகத் தெரிகின்றது, இவ்விரத காலங்களில் கோகுலத்துப் பெண்கள் வைகறையில் துயிலெழுந்து கிருஷ்ண சரிதங்களைப் பாடிக் கொண்டு நீராடுவர் என்று தெரிகின்றது. இதே கருத்தைத்தான் பெரியவாச்சான் பின்ளையும் தமது வியாக்கியானத்தின் அவதாரிகையில்