பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 மாணிக்கவாசகர்



வள்ளுவர் வாக்கும்? தமிழ் நாடு உய்வது பக்தியும் ஆன்ம ஆற்றலும் மிக்க பெண்களின் கையில்தான் உள்ளது.

பத்தினிக் கடவுள் வழிபாடு மூலமாக எல்லா மரபினரை யும் ஒன்று படுத்தி வாழ முயன்றார் இளங்கோவடிகள். அது போலவே இப்பாவை நோன்பினால் எல்லா மரபினரையும் ஒன்று படுத்தும் முயற்சியும் தொன்று தொட்டு இருந்துவரு கின்றது. இஃதறியாமல் இடைக்காலத்தில் வேறுபட்டு ஒன்றையொன்று பழித்துக் கூறும் பழக்கத்தில் ஆழ்ந்துவிட்ட சைவம் வைணவம் முதலான சமயங்கள் இந்தத் தெய்வத் தமிழ்ப் பனுவல்களால் முன்போல் ஒன்றுபடுத்தும் முயற்சியில் சிறந்த சேவை செய்து வருபவர் காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு பெருந்தவத்திரு சங்கராச்சாரிய சுவாமிகள். கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக இப்புனிதச் சேவையில் ஈடுபட்டு வரும் உபநிடத முனிவர்போன்ற அடிகட்குத் தமிழகம் என்றென்றும் கடமைப் பட்டுள்ளது.

38. திருவம்மானை

அம்மானை' என்பது மகளிர் விளையாடல்களில் ஒன்று. அம்மனைக் காய்கொண்டு விளையாடும் இளமகளிர் தம்முள் உரையாடி மகிழும் முறையில் அமைந்த வரிப்பாடல்களே இலக்கியங்களில் அம்மானை என்ற பெயரால் சிறப்பித்து வழங்கப் பெற்றுள்ளன. மகளிர் அம்மனை ஆடுங்கால் இறைவனைப் பரவிய புகழ்ப் பாடல்களையும் அரசன் முதலிய தலைவர்களைப் பற்றிய புகழ்ப்பாடல்களையும் பாடி மகிழ்வர். இது,

  அம்மனை தங்கையிற்
     கொண்டங் கணியிழையார் 
  தம்மனையிற் பாடுங்
     தகையேலோ ரம்மானை
                      -சிலப், வாழ்த்துக்காதை (19)


4. திருப்பெருந்துறையில் ஆருளிச்செய்யப் பெற்றதாகக் கூறும் நம்பி திருவிளையாடல்