பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202 மாணிக்கவாசகர்



தம் உள்ளத்தே ஊற்றெடுத்துப் பெருகிய பேரானந்தத்தில் திளைக்கும் நிலையில் இப்பனுவல் அருளிச் செய்தமையால் இதற்கு "ஆனந்தக் களிப்பு" என முன்னோர் கருத்துரை கூறியுள்ளனர். கடைசிப்பாடலில் பேரானந்தம் பாடுதுங் காண் அம்மானாய்’ என முடிவதால் ஆனந்தக்களிப்பாயிற்று என்றலும் பொருந்தும். இப்பனுவலின்கண்,

  விண்ணாளும் தேவர்க்கும் மேலாய வேதியனை 
  மண்ணாளும் மன்னர்க்கும் மாண்பாகி நின்றானைத் 
  தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப் 
  பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில் 
  கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட 
  அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.(10) 

என்பது பத்தாம் பாடல். 'அண்ணாமலையானை' என்னும் குறிப்பு இப்பதிகம் அண்ணாமலைக்கண் பாடியருளினமையை தினைவுறுத்துவதாகும்.

கேட்டாயோதோழி எனத் தொடங்கும் ஆறாம் பாடலில் உயிர்கள் மும்மலங்களும் நீங்க இறைவ்ன் திருவடியாகிய திருவருளிற் பிரிவறக் கலத்தலே வீடுபேறென்னும் உண்மையினை அடிகள் குறிப்பாக அறிவுறுத்தியுள்ளார்.

  சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
  நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையும்
  செலவு நீ நயந்தனை யாயின் 

என வரும் திருமுருகாற்றுத் தொடர்ப் பொருளை விளக்கும் நச்சினார்க்கினியர் "புலம் பிரிந்துறையும் அடி-மெய்ஞ்ஞானத்தால் அறிதலைக் கைவிட்டுத் தங்கும் அடி: திருவடியே வீடாயிருக்கும்" என்றார். அது "தென்னன் பெருந் துறையான், காட்டாதன வெல்லாம் காட்டிச் சிவங்காட்டித் தாட்டாமரை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி’ என்பத