பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை அருளிச் செயல்கள் 203


 னாலும் பிறரும் திருவடியைக் கூறுமாற்றானும் உணர்க" என இத்திருவம்மானைப் பாடலின் பொருள் நுட்பத்தினை விளகியுள்ளமை ஈண்டு நினைத்தல் தகும்.

இந்தப் பனுவலில் மாலும் அயனும் காண்டற்கரிய வள்ளல் திருப்பெருந் துறையில் குருவாக எழுந்தருளித் தன்னை ஆட்கொண்டதிறம், பந்தமெலாம் நீங்கப் பரிமேலழகனாக எழுந்தருளி அளவிலா ஆனந்தம் அருளிய பான்மை, வந்தி என்னும் செம்மணச் செல்வியின் பொருட்டு கூலியாளாய் வந்த எளிமைத்திறம், அண்ணாமலையண்ணல் பெருந்துறையில் தம்மையாண்ட தகவு முதயவற்றைக் குறிப்பிடுகின்றார். மேலும், பாண்டிநாட்டைச் சிவலோகமாக்கின பரிசு, ஐயாற்றில் அமர்ந்தருளிய வண்ணம், தன்னை மதியாத இந்திரன், எச்சன், கதிரோன் முதலிய தேவர்களைத் தண்டித்த வெற்றிப்பாடு, மதுரையில் குதிரைச் சேவகனாய் எழுந்தருளிக் குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டிய பெற்றி ஆகியவையும் இப்பனுவலில் விரித்துரைத்துப் போற்றப்பெற்றுள்ன. .