பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 மாணிக்கவாசகர்



தில் நூற்றுக் கணக்கான திருக்கோயில்கள் இருந்தும் தில்லையையே கோயில் என்று வழங்குகின்றனர் சைவப் பெருமக்கள். வைணவர்களும் திருவரங்கத்தைக் கோயில் என்று வழங்கிவருவது ஈண்டு நினைவு கூரத்தக்கது. தில்லை என்னும் சிதம்பரம் ஆதிகாலந் தொட்டே தமிழரின் பெருமைக்கும் தெய்விக அருளுக்கும் இருப்பிடமாகத் திகழ்வது. புலவர் பெருமக்களும் அடியார்களும் போற்றும் தெய்வத்திருத்தலமாக விளங்குவது. சோழர், பாண்டியர், பல்லவர், நாய்க்கர் ஆட்சிக்காலங்களில் கணக்கின்றி திருப் பணி செய்யப் பெற்றது. பண்டைத்தமிழர்கள் பாரதத்தையே விராட்புருடனாகக்' கருதி சிவத்தலங்களைக் கொண்டு அதனை விளக்குவர்.திருவாரூர் அதன் மூலாதாரம்; திருவானைக்கா கொப்பூழ் திருவண்ணாமலை மணிபூரகம்: சிதம்பரம் இதயம்: திருக்காளத்தி கண்டம்; காசி புருவத்தின் நடுஇடம். சிதம்பரம் இதயம் ஆதலின் இறைவது இயக்க மாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்ற ஐந்தொழில்களும் ஆடலரசனின் ஆனந்தத் தாண்டவத்தில் அமைந்திருப்பது ஒரு வியக்கத்தக்க தத்துவ மாகத் திகழ்கின்றது.

ஆனந்தத் தாண்டவத்தின் வரலாறு இது. உலகம் தோன்றிய காலம்முதல் இத்தாண்டவம் நடைபெற்று வருகின்றது. ஒரு காலத்தில் தேவர்களின் வேண்டுகோட் கிணங்கி இறைவன்தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்குவதற்காக ஆடிய கூத்து இது. அப்போது அவர் பிட்சாடனர் வடிவந் தாங்கி, திருமால் மோகினியாகப்


1. சிதம்பரம் (தில்லை): கடலூர் மயிலாடுதுறை தென் னிந்திய இருப்புப் பாதையில் உள்ள ஓர் இருப்பூர்தி நிலையம், நிலையத்திலிருந்து சுமார் ஒரு கல் தொலைவிலுள்ளது திருக்கோயில். தில்லை என்பது இத்தலத்தின் பழம்பெரும் பெயர்