பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை நிகழ்ச்சிகள் 211



அங்ஙனம் விளையாடும் மகளிர் பயணற்ற சொற்களை நீக்கி எம்பெருமானாகிய இறைவனைப் பாடுமின்' எனத் தமக்குள் உரையாடும் நிலையில் திருத்தெள்ளேனம், திருவுந்தியார், திருத்தோணோக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னுாசல் ஆகிய பனுவல்களைப் பாடிப் போற்றுகின்றார். அன்னைப் பத்து. திருக்கோத்தும்பி, குயிற்பத்து, திருத்தசாங்கம், அச்சப்பத்து ஆகிய செழும் பாடல்களைப் பாடித் தில்லை நகர்ப்புறத்திலே இலைக்குடில் (பன்னசாலை) அமைத்து அதன்கண் தங்குகின்றார். இந்த வரலாறு திருவாதவூர் புராணத்தைத் தழுவியது . இவர் இங்ங்னம் இருக்கும் நிலையில் வேறொரு நிகழ்ச்சி நடைபெறுகின்றது. சிவனடித் தொண்டு புரிந்துவரும் அடியார் ஒருவர் சோழ நாட்டுத் தலங்களை வணங்கி வழி பட்டுக் கொண்டு தில்லைக்கு வருகின்றார். பொன்னம் பலத்தைக் கண்குளிரக் கண்டு இறைஞ்சுகின்றார். பின்னர் இவர் ஈழ நாட்டை அடைகின்றார். தில்லைச் சிற்றம் பலத்தின் பெருமையை உணர்ந்த இந்த அடியார் தாம் செல்லுமிடந்தோறும் பொன்னம்பலம்’ என்று கூறுதலை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். இவரது இயல்பினைக் கண்டு பொறாத புத்தர்கள் தம் வேந்தனாகிய ஈழ மன்னனைக் கண்டு முறையிடுகின்றனர். அரசனும் அந்த அடியவரை அரண்மனைக்கு அழைத்து வருமாறு பணிக் கின்றான். அங்ங்னம் அழைக்கப் பெற்று வந்தவர் அரசன். முன்னிலைபில் 'பொன்னம்பலம்’ என்று கூறி அமர்கின்றார். அரசன் அச்சொல்வின் சிறப்பு யாது?’ என்று வினவ, சிவனடியார், சிவபெருமான் சிவகாமியம்மை கண்டுகளிக்கும் வண்ணம் திருநடனம் புரியும் தில்லைச் சிற்றம்பலத்தின் சிறப்பினை விரித்துரைத்து ஒருமுறை பொன்னம்பலம் என்று சொன்னவர் 21600 முறை ஐந்தெழுத்து ஒதிய பயனைப் பெறுவர் என்று கூறுகின்றார். இதைச் செவிமடுத்த ஆருகே