பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 மாணிக்கவாசகர்



மங்கைக்கண் உமையம்மையுடன் எழுந்தருளியிலிருந்து அமுதுண்டருளினர்; தாழ்ந்த கடலின்மீது வலைவாணனாகக் காட்சியளித்தருளினன்; நிலவுலகம் எங்கனும் சிவவிளக்கம் மிகும்படியாகப் பாண்டியன்முன் குதிரைச் சாத்தாய் எழுந்தருளி நம்மை ஆண்டுகொண்டருளினன். செல்வமும் சிறப்பும் சேர்வதாகிய செந்நெறி திகழும் திருவுத்தரகோச மங்கைப் பதியிலுள்ளான். மாலுள்ளிட்ட தேவர்களும் அறிதற்கும் அரியவன். அவன் திருவடியினை வாயாரப் பாடி அகம் உருகி உள்ளும் புறமும் பொலிவுற்றுப் பொன்னுரசல் ஆடுவோமாக' என்கின்றார்.

இங்கு வெள்ளி மலையால் குறிஞ்சியும், திருவுத்தர கோசமங்கையால் முல்லையும், தாழ்கடலால் நெய்தலும், பரிமேலிவர்தலால் மருதமும் ஆகிய நானிலமும் குறிப்பில் புலனாவதைக் கண்டு மகிழலாம்.

வைணவ சம்பிரதாய நூல்களில் திருமாலையும் பெரிய பிராட்டியாரையும் ஊஞ்சலில் எழுந்தருளுவித்து அவர்கள் புகழைப்பாடித் தோழியர்கள் ஆட்டுவதாக வருவதை ஈண்டு நினைத்தல் தகும். திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் பாடிய "சீரங்கநாயகரூசல் (32 பாசுரங்கள் அடங்கியது) என்ற பனுவலை ஈண்டு நினைத்தல் தகும்.


44. திருத்தசாங்கம் (19)

. ஆட்சிபுரியும் தலைவன் ஒருவனுக்குச் சிறப்பாகச் சொல்லத்தக்க பத்து அங்கங்களை யும் எடுத்துரைத்துப் போற்றும் பனுவல் தசாங்கம்' எனப் பெயர் பெறும். வாதவூரடிகள் தில்லையில் வில்வவனத்தில் தங்கியிருந்தபோது பாடியது இப்பதிகம். தன்னேரில்லாத் தலைவனாகிய சிவபெருமான்பால் காதல் கொண்ட நங்கை யொருத்தி கிளியை நோக்கிச் சிவபெருமானுக்குரிய பேர் நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார். கொடி என்பவை யாவை என வினவக் கேட்ட கிளியானது