பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 239



படாது சிறிது புலப்பட்டுத் தோன்றுமாறு போன்று, இறைவன் அடிகளுக்குச் சிறிதளவே தோன்றி அருள் செய்து மறைந்ததைக் குறிப்பிடுகின்றார்.

  விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல் 
  மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் (5-90:10) 

எனவரும் அப்பர் பெருமானின் அமுதத் திருமொழி ஈண்டு ஒப்பு நோக்கி மகிழ்வதற்குரியது.

அடிகள் அம்பலக் கூத்தனை நோக்கி,

  இரங்கு நமக்கம் பலக்கூத்தன்
     என்றென் றேமாந் திருப்பேனை 
  அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
     ஆள்வா ரிலிமா டாவேனோ (7) 

(என்றென்று - பலகாலும் எண்ணி; அருங்கற்பனை - இல்லாத கற்பனை; ஆள்வார் இலி மாடு - உடையவன் அற்ற ஊர் மாடு)

என்று அன்பினால் வேண்டுவதாக அமைந்தது இத்திருப் பாடல். இதன் கண் அருங்கற்பனை என்றது, யாவராலும் முயன்று பெறுவதற்கு அரியதாய், இறைவனே பெருந்துறையில் குருவாக எழுந்தருளிக் கற்பித்தருளிய சிவஞான உபதேசத்தினை. ஆள்வாரிலி மாடு - மேய்ப்பாரில்லாத ஊர்க்காளை. கண் கெட்ட, ஊர் ஏறாய் இங்கு உழல் வேனோ (திருச்சதகம்-53) என்று முன்னரும் கூறியுள்ளமை ஈண்டு நினைத்தல் தகும்.

சிரிப்பார் களிப்பார் தேனிப்பர் (9), ‘நல்கா தொழியான் (10) என்ற முதற் குறிப்புடைய இறுதிப் பாடல்கள் சிவஞானிகளாகிய அடியார்களது அநுபவத்தை இனிது விளக்குவன. சிரித்தல்-உள்குவார் உள்கிற்றெலாம் உடனிருந்தறிதி' என இறைவனது முற்றுணர்வினையும்,