பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 மாணிக்கவாசகர்



அதனையறியாது தாம் செய்த சிறுமையினையும் எண்ணி வெள்கிச் சிரித்தல். களித்தல் 'சிறுமான் ஏந்தி தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு இறுமாந்திருக்கும் நிலையை எண்ணி எண்ணிக் களித்தல்'. தேனித்தல்- 'காணும் கரணங்களெல்லாம் பேரின்பம்' எனச் சிவ பரம்பொருளையே பேணித் தியானித்து உள்ளம் அள்ளுறித் தித்திக்கப் பெறுதல்.

45. கண்ட பத்து (31)

பல தலங்களையும் சேவித்துக் கொண்டு தில்லை மூதூரையடைந்த மணிவாசகப் பெருமான் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் இயற்றியருளும் ஆனந்தக் கூத்தன் ஆசிரியத் திருமேனி காட்டி அருள்புரியக் காண் கின்றார். இதனைக் கண்ட அடிகள் ஆனந்தக் கண்ணிர் சொரியும் நிலையில் கண்ட பத்து’ என்ற பதிகம் பாடு கின்றார் என்பது வரலாறு. நிருத்த தரிசனம் என்பது பழைய குறிப்பு. நிருத்தம் - கூத்து, நடனம்.

  இந்திரிய வயமாக்கி 
     இறப்பதற்கே காரணமாய் 
  அந்தரமே திரிந்துபோய்
     அருநரகில் வீழ்வேற்குச் 
  சிந்தைதனைத் தெளிவித்துச்
     சிவமாக்கி என்னயாண்ட 
  அந்தமிலா ஆனந்தம்
     அணிகொள்தில்லை கண்டேனே (1) 

(இந்திரியம் - பொறிகள்; அந்தரம் - வான்; சிவமாக்கி - சிவத்தின் வசப்படுத்தி; அந்தம் இலா - முடிவு இல்லாத)

என்பது இதன் முதற்பாடல். இதில், "மெய்வாய் கண் செவி மூக்கு என்னும் ஐவகைப் பொறிகளின் வயப்படு மயக்க மெய்தித் திருவடி சாராது பிறந்து இறப்பதற்கே காரண மாகிப் பற்றுக்கோடும் நிலைபேறு மின்றி உழல்வதாகிய