பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள் 241


 அந்தரமே திரிந்துழன்று அதன் பயனாக மீளா நரகிற்கு ஆளாய் வீழ்ந்து மாளாத் துன்பமுறும் அடியேற்கு எண்ணலாகிய சிந்தையினைத் திருவருளால் தெளிவித்துத் தன் கண் குணங்களையும் தந்து தன் வயமாக்குதலாகிய சிவமாக்கி எளியேனை யாட்கொண்டருளினை. அங்ஙனம் ஆண்ட ஈறிலாத இன்பமே வடிவமாகிய சிவபெருமானை அவனருளால் அழகுமிக்க, தில்லைப் பொதுமன்றின்கண் கண்டு இன்புற்றேன்” என்கின்றார். இப்பதிகத்தின் ஒவவொரு திருப்பாடலும் தில்லையில் கண்டேனே' என்று முடிவதால் இது கண்ட பத்து என்ற திருப்பெயரினைப் பெறுகின்றது. இந்திரியங்களின் வசப்பட்டு மயங்கி அழியாத படி கைதூக்கித் தாமாக்கும் தன்மை வாய்ந்த ஆனந்தத்தைத் தில்லையில் கண்டேன்’ என்று மகிழ்ந்துரைப்பது கண்ட பத்து என்று திருப்பெருந்துறைப் புராணமும் கூறும். இது பற்றியே பண்டையோர் நிருத்த தரிசனம் எனப் பொருந்தக் கருத்துரைத்தனர். திருநாவுக்கரசர் பெரு மான் திருவையாற்றில் தில்லைக் காட்சியைக் கண்டு பாடிய மாதர் பிறைக் கண்ணியானை (4.3) என்ற முதற்குறிப்புடைய பாடல் தோறும்

  கண்டேன் அவர்திருப் பாதம்
  கண்டறி யாதன கண்டேன்

எனத் தாம் கண்ட தெய்வக் காட்சியினை விரித்துரைத்துப் போற்றியுள்ளமை ஈண்டு நினைவு கூரத்தக்கது. மா- i6