பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 மாணிக்கவாசகர்




   வாதவூரரின் கல்வி ஆற்றல் முதலியவை எங்கும் பரவு கின்றன. அக்காலத்தில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த அரிமர்த்தன பாண்டியன் செவிக்கும் எட்டுகின்றன. எப்படியாவது அவரைத் தன் அமைச்சராக்கிக் கொள்ளக் கருதுகின்றான் மன்னன். உடனே உடைவாள் தரித்த சேவகன் ஒருவன் மூலம் ஒலை அனுப்பிவைக்கின்றான். அதில் சம்புபாதாசிருதயர் தாமதமுமின்றித் தம் அருமந்த மகனை அரசவைக்கு அனுப்பிவைக்கின்றார்' அரசன் அனுப்பி வைத்த பல்லக்கில் பெற்றோரும் உறவினரும் வாழ்த்த ஊர்ப் பெருமக்கள் மகிழ்ச்சிப் பெருங் கடலில் திளைக்க, வாதவூரர் மதுரைக்குப் புறப்படுகின்றார்.
   மகன்தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை  
   என்நோற்றான் கொல்லெனும் சொல். 6

என்ற குறள் சிலரது வாயில் ஒலிக்கின்றது.

பெற்றோர் தம் மக்களைப் பொருள் நிறைந்தவர்களாகச் செய்வதைவிட அறிவு நிறைந்தவர்களாகச் செய்வதே சிறப்பு. செல்வத்தைக் கண்டு பெற்றோர் மட்டிலும் மகிழலாம்; ஆனால் மக்களிடம் அறிவு நிறைந்திருந்தால் பெற்றோரும் மகிழலாம்; உலகோரும் மகிழலாம். உண்மையாக நோக்கினால், தம் மக்கள் அறிவுடையவர்களாக இருப்பது தம்மைவிட உலகத்தார்க்குப் பெருமை தருவதாகும். இதனால் மக்களுக்கு உரிய கடமையைச் செய்வதோடன்றி, உலகத்தாருக்கும் கடமை செய்வதாக முடியும்.

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது 7

6. குறள் 70 7. டிெ-68.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/26&oldid=1012155" இலிருந்து மீள்விக்கப்பட்டது