பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 243


 இப்பதிகத்திற்கு 'ஆனந்த முறுதல்' என்று முன்னோர் கருத்துரை கூறியுள்ளனர். நேயத்திலே ஒன்றுபட்டுச் சிக்கென அழுந்தினைமையால் ஏற்படும் பெருங்களிப்பு என்பது இதன் பொருள். சிவானந்தம் உற்றார்க்கன்றி இத்தகைய அஞ்சாமையும் அச்சமும் ஒருங்கு நிகழாவாதலின் இக்கருத்து பொருத்தமாக அமைகின்றது.

  அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
  அஞ்சல் அறிவார் தொழில் (குறள்-428) 

எனவரும் திருக்குறட் பொருளைத் தெளிவுறப் புலப்படுத்தும் முறையில் இப்பதிகத் திருப்பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்தோறும் முதலடியில் அஞ்சத்தகாதனவற்றை எடுத்துக் காட்டி மற்றைய மூன்று அடிகளில் அஞ்சத்தக்கனவற்றை விரித்துக் கூறுவர்.

இப்பதிகத்தில் இரண்டு திருப்பாடல்களில் ஆழங்கால் பட்டு அநுபவிப்போம்.

  பிணியெலாம் வரினும் அஞ்சேன்
     பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன் 
  துணிநிலா அணியி னான்தன்
     தொழும்பரோ டழுக்தி அம்மால் 
  திணிநிலம் பிளந்தும் காணாச் 
     சேவடி பரவி வெண்ணிறு  
  அணிகிலா தவரைக் கண்டால்
     அம்மகாம் அஞ்சு மாறே (3) 

(துணி நிலா-பிறைமதி தொழும்பர்-அடியார்; அம்மால் - அந்த விஷ்ணு)

என்பது இப்பதிகத்தின் ஐந்தாம் பாடல். உடலுக்குப் பலவகையான நோய்நொடி வந்தாலும், உள்ளத்தை வருத்தும் பிறப்பு இறப்பு ஆகிய பெரிய துன்பங்கட்கும்