உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 247



  கதிக்கும் பசுபாசம்
     ஒன்றுமிலோ எனக்களித்துஇங்கு 
  அதிர்க்கும் குலாத்தில்லை
     ஆண்டானைக் கொண்டன்றே (7) 

(மிதிக்கும் - நசுக்கும்; வல்லரக்கன் - இராவணன்;கதிக்கும் - நடக்கின்ற)

என்பது ஏழாம் பாடல். இதில், "இராவணன் தோள் நெரியும்படி கயிலைக் கண்ணுதலோன் மிதித்தருளினான்: அத்தகைய திருவடி, திருவருளால் அடியேன் தலைமீது பொருந்துவதாயிற்று. அங்ங்னம் பொருந்தி வீற்றிருக்கும் பேரருளால் முனைத்துத் தோன்றக் கூடிய சிற்றுணர்வாகிய’ பசுத்தன்மையும் சுட்டுணர்வாகிய" பாசத்தன்மையும் இவற்றிற்கு ஏதுவாகிய ஆணவத்தன்மையுமாகிய குற்றப்பாடுகள் ஒன்றும் அடியேன்மாட்டு இல்லாது அகன்றன: ஆரவாரித்தற்கேதுவாகிய விளக்கம் மிக்க தில்லையாண்டானைப் பற்றிக் கொண்டு அல்லவா அடியேன் களிப்புறு கின்றேன்” என்கின்றார்.

  இடக்கும் கருமுட்
     டேனப்பின் கானகத்தே
  நடக்கும் திருவடி
     என்தலைமேல் கட்டமையால்

2. சிற்றுணர்வு - பசுவின் அறிவு. பசு - ஆன்மா. இது ஒரு காலத்து ஒரு பொருளைய்ன்றிப் பிறிதொன்றினை உணரம்ாட்டாது; ஒவ்வொன்றாகவே உணரும் தன்மையது; அதனையும் விட்டு விட்டு உணர்வது. அதனால் அது சிற்றுணர்வு என்று பேசப்பெறுகின்றது. 2. சுட்டுணர்வு : ஒரு காலத்தில் ஒரிடத்தில் ஒரு பொருளையே குறித்துணர்தல், இது சிற்றறிவு: என்றும் சொல்லப்பெறும்.