பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250 மாணிக்கவாசகர்



எழுக' என்று அடியார்கட்கு அறிவிப்பது இத்திருப்படை எழுச்சி எனலாம். இங்ஙணம் தடை செய்தலின், உள்ள மலம் தேய மேல் விளைவு எழாதபடி அற்றுப் போகும். 'துர்க்' குணமாயப் படைகள் விளையாதபடி அருள்வாளேந்தி அடியார்கள் அனைவரையும் வருமாறு அழைப்பது திருப் படையெழுச்சி என்று புராணமும் கூறும். இஃது இரண்டு பாடல்களையுடையது.

  ஞானவாள் ஏந்தும் ஐயர்
     காதப் பறையறைமின் 
  மானமா ஏறும்ஐயர்
     மதிவெண் குடைகவிமின் 
  ஞானநீற்றுக்கவசம்
     அடையப் புகுமின்கள் 
  வானவூர் கொள்வோம் நாம்
     மாயப்படை வாராமே (!)

(ஏந்தும் ஏந்துங்கள்: நாதம் - திருநாமம் ஒதும்லி: மானம் மா. பெரியகாளை, வானவூர் - வீட்டுலகம்: மதி - விவேகம் நீற்றுக் கவசம் - திருநீறு என்னும் கவசம், மாயப்படை. காமக் குரோதாதிகளாகிய சேனைகள்)

என்பது முதற் பாடல். இது படைவீரர்கட்குத் தேவைப்படும் போர்க்கருவிகள் இன்னவை எனக்காட்டுகின்றது. "அவித்தையாகிய மாயையில் உதிப்பது அஞ்ஞானம். இது மனிதனுக்குப் பெரும் பகை. அவன் படும் துன்பத்திற் கெல்லாம் இதுவே காரணம், ஞானவாள் ஒன்றே அஞ்ஞானத்தை அகற்று வதற்கு உற்ற உபாயம். இறைவனுடைய நாமசெபம் மெய்ஞ்ஞானத்தை வளர்க்கின்றது. சீவான்மாவை வாகனமாகக் கொண்டு சிவன் வீற்றிருக்கின்றார் என்னும் மெய்யுணர்வினின்று வீரம் பிறக்கின்றது. விவேகமானது