பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 255



இவ்வாறு தாம் அழைத்த நிலையிலும் பின் தங்கியிருப்பாரது நற்பேறின்மையை நினைந்து வருந்திய அடிகள் பெருமான், இப்பொழுதே சிவன் திருவடிக்கு ஆளாகுமின்: அங்ஙனம் ஆளாகாது பின்னிருந்து இரங்குவீராயின் தீராத மருள் கொண்டவராவீர்; அம்மருளிடைப்பட்டு மயங்குவீராயின், பின் எவரும் தும்மை மதியார்; அப்பொழுது அறிவு திரிந்து கலக்க மெய்திப் பெரிதும் மயங்குவீர். இவ்வுண்மையினைத் திருவருள் நாட்டத்தால் தெளிவு பெறுவீர்களாயின், உடனே புறப்படுங்கள். சிவபுரத்து வீற்றிருந்தருளும் திருப்புயங்கச் செல்வன் திருவருளை வந்து பெறாதார் அனைவரும் "ஐயோ ஐயோ ஐயோ என்று கழிவிரக்கம் கொள்ளத்தக்கவராவார்" (10) என்று அருள் மிகுதியால் அரற்றி அழைக்கும் நிலையில் இப்பதிகம் நிறைவு பெறுகின்றது.

இந்தப் பதிகத்தை படித்து ஆழங்கால் படும்போது பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டிலும் (1.1), நம்மாழ்வார் திருவாய்மொழியிலும் (5.2) உள்ள பாசுரங்கள் நினைவிற்கு வருகின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடலைக் காட்டுவேன்.

  புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
     புயங்கன் தாளே புக்திவைத்திட்(டு) 
  இகழ்மின் எல்லா அல்லலையும்
     இனியோர் இடையூறு அடையாமே 
  திகழும் சீரார் சிவபுரத்துச்
     சென்று சிவன்தான் வணங்கிநாம் 
  நிகழும் அடியார் முன்சென்று
     கெஞ்சம் உருகி நிற்போமே - யாத்திரைப்பத்து-6

(புயங்கன் - நாகாபரணன்; புந்தி - புத்தி; அல்லல் - துன்பம்; நிகழும் அடியார் - பழைய அடியார்)