பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

255 மாணிக்கவாசகர்



  அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி
     அசுரர் இராக்கதரை
  இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த
     இருடிகே சன்தனக்கு
  தொண்டக் குலத்தில் உள்ளிர்வந்(து)அடிதொழுது
     ஆயிர நாமம்சொல்லி
  பண்டைக் குலத்தைத் தவிர்ந்துபல் லாண்டுபபல்
     லாயிரத் தாண்டென்மினே    - திருப்பல்லாண்டு.5

(அண்டம் - உலகுருண்டை; அதிபதி - தலைவன்: இண்டைக் குலம் - நெருக்கமான கூட்டம்; தொண்டைக்குலம் - அடியார் திருக்கூட்டம் ; பண்டைக் குலம் - பழைய குலம் (பயனை விரும்பிக் கிடக்கும் பழையதன்மை))

  கொன்றுயிர் உண்ணும் விசாதி
     பகைபசி தீயன எல்லாம் 
  நின்றுஇவ் வுலகில் கடிவான்
     நேமிப் பிரான்தமர் போந்தார் 
  நன்றிசை பாடியும் துள்ளி
     யாடியும் ஞாலம் பறந்தார் 
  சென்று தொழுதுய்ம்மின்; தொண்டீர்!
     சிந்தையைச் செந்நி றுத்தியே -   திருவாய் 5.2 : 6

(கொன்று - கொலை செய்து; விசாதி - வியாதி; பகை - வெறுப்பு; தீயன - கொடியவை; நேமி - சக்கரம்; நேமிப் பிரான்தமர் - பாகவதர்கள்; ஞாலம் - பூமி; பரந்தார் - பரவியுள்ளனர்; சிந்தை - நெஞ்சு; செம் நிறுத்தி - செம்மையாக நிலைநிறுத்தி)

இம்மூன்று திருப்பாடல்களும் அடியார்களை அழைத்து உய்யுமாறு அறிவுரை புகட்டுகின்றன.