பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258 - மாணிக்கவாசகர்



4. கோயில் சுடுகாடு...தாயும் இலி தந்தையிலி, தான். தனியன்...காயில் உலகு அனைத்தும் கல்பொடிகாண், சாழலோ (திருச்சாழல்-3) இது நான்காவது படை, சிவன் தியாகராசன். தியாகத்தாலன்றி சீவன் சிவசொரூபம் அடைய முடியாது. உடலைச் சுடுகாடாகக் கருதவேண்டும். அதன் வாயிலாகப் பெறுகின்ற சுகம் வெந்து சாம்பலாக வேண்டும். மனிதன் உலகில் வந்தது தனியாக; பின்பு அவன் உலகைவிட்டுப் போவதும் தனியாக. ஆதலால் அவன் இவ்வுலகில் இருக்கும்பொழுதே தாயும் இலி, தந்தை இலியாய்த்தான் தியாகத்தின் மூலம் தனியன் ஆகவேண்டும். அண்டங்கள் அனைத்தையும் துடைக்க வல்லவன் சிவன். தன் உடல் என்னும் பிண்டத்தைச் சவம் போன்று செய்ய வல்லவன் சிவனுக்கு உரிய நல்ல சாதகன் ஆகின்றான்.

5. யானே பொய் என் நெஞ்சும் பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே (திருச்சதகம்9.10) என்பது ஐந்தாவது படை. பரமனை நாடி அழுகின்ற அளவு பொய்யான சீவான்மனுக்கு மெய்யான பரபோதம் வளர்கின்றது. மற்று, அழுகையில் இரண்டு விதம் உண்டு. உலக இன்பத்தை நாடி அழுவது ஒருவகை. இது பிறவிப் பிணியைப் பெருக்குகின்றது. பரமனை நாடி அழுபவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த இரண்டாவது வகை அழுகை வாயிலாகத் துரய்மையடையவும் பரமனை அணுகவும் அவர்களுக்குச் சாத்தியமாகின்றது.

6. அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமையும்...... நானோ இதற்கு நாயகமே (குழைத்தபத்-7) : இஃது ஆறாவது படை உறுப்புகள் உடலில் ஒன்று பட்டிருப்பது போன்று சீவாத்மன் பரமாத்மனில் ஒன்றுபடுகின்றான். அப்பொழுது அவ்வாயிலாக நடைபெறுவதெல்லாம் சிவன் செயல். பிழையாகத் தென்படுவதிலும் நலனே நிறைந்திருக்கும்.