பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260 மாணிக்கவாசகர்



சிவ உபாதி ஒழிதல்:

இதற்குச் சித்பவாநந்த அடிகள்தரும் விளக்கம் அற்புதமானது; மிகத் தெளிவானது. ஏதேனும் ஒருபொருள் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளும் வியக்தி, அல்லது வடிவம், அல்லது நிலைக்கு உபாதி’ என்று பெயர். சான்று ஒன்றின் மூலம் இக்கோட்பாட்டை விளக்குவோம். நீர் என்பது ஒரு பொருள் (வஸ்து); ஐம்பெரும் பூங்களில் ஒன்று. அது கடல் நீர் நிலத்து நீர், குளத்து நீர், அகழி நீர், கிணற்று நீர், ஆற்று நீர், சேற்று நீர், மழை நீர், ஒடை நீர் அருவி நீர்-இப்படியெல்லாம் (தான் இருக்கும் இடத்திற்கு ஏற்பப் பெயர் பெறுகின்றது. இந்நிலைகளில் எல்லாம் அஃது இளகித் திரவ நிலையில் உள்ளது. பின்பு அது காற்றுப் போன்று இருப்பதும் உண்டு. நீர் ஆவி, நிறமில்லாத ஆவி, வெண்மேகம், செம்மேகம், கார்மேகம், மஞ்சு, மூடுபனி, நீர்ப்பணி ஆகிய பல வடிவங்களில் அஃது அப்பொழுது உள்ளது, மேலும் அது குளிரால் கடினபதார்த்தம் ஆவதும் உண்டு. உறைபனி, கெண்டைப் பணி, ஆலங்கட்டி, ஐஸ்கட்டி என்ற நிலையில் அஃது அப்பொழுது உள்ளது. இத்தனை வித வடிவங்களும், நிலைகளும் நீரின் உபாதிகளாகும்.இந்த வேறுபாடுகளுக்கிடையில் நீர் தனது நீர்மையை இழப்ப தில்லை. கங்கை நீர் என்பது நீரின் ஒரு மேலான உபாதி. சாக்கடை நீர் அல்லது சிறுநீர் என்பது அதன் கீழான உபாதி. கீழ்நிலையை முன்னிட்டு அந்த வடிவு எடுத்திருக்கும் நீரை இழிவானது எனல் ஆகாது. ஏனென்றால் அதன் கீழ்நிலையும் தேவையானதே. இனி, நீரின் உபாதிக்கு நிகரானது சீவான்மாவின் உபாதி. சீவன் கல்ஆய், புல் ஆய், புழுஆய், பூச்சிஆய், பாம்புஆய், பறவையாய், விலங்குஆய், மனிதன்ஆய், முனிவனாய், பக்தனாய், ஞானிஆய் இறுதியில் பரம் பொருளில் தனது சிவ உபாதியை ஒழித்துத் தள்ளுகின்றான். அவனுக்கு ஒர் உபாதி உருவெடுக்கும்பொழுது அதற்கு