பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 மாணிக்கவாசகர்



தொண்டனும் அபேத நிலை எய்துகின்றனர். சிவனார் மலர்ப் பாதத்தைக் கண்ணப்பநாயனார் வணங்குதற்கு மாறாகத் தமது செருப்புக் காலை உயர்த்திச் சிவனார் கண்ணுக்கு அருகில் வைத்தார். பரமனுக்கும் அச்செயல் பரம திருப்தியை உண்டு பண்ணுகின்றது. சமாதி நிலையில் பசு, பதி என்ற பேதமின்மையால் இத்தகைய நிகழ்ச்சியும் நேர்வதில்லை.

இந்த அரிய பெரிய நிகழ்ச்சிகள் யாவும் இயற்கையோடு சம்பந்தப்பட்டவைகள்; ஆகையால் மாயா காரியங்களாகின்றன. பின்பு அதீதத்தில் உள்ள பரபோதத்தில் இவை யாவும் பொருளற்றவைகளாகின்றன.

          பாடல்-2
  காரணம் ஆகும் அனாதி
     குணங்கள் கருத்துறு மாகாதே (அடி-2) 

பொருள் : இறைவனது நித்திய விபூதிகளைப் பற்றிச் சிந்தனை பண்ணுவதும் இல்லை.

விளக்கம் : ஓரூரும் ஒரு நாமமும் இல்லானுக்கு ஆயிரம் திருநாமங்கள் அமைந்துள்ளன. சிவனாருடைய எண்ணிறந்த குணச் சிறப்புகளை விளக்குதற்கென்றே இவை யாவும் அமைந்துள்ளன. இவற்றைக் கருத்தில் ஏற்று ஒர்ந்து பார்க்க எத்தனையோ பிறவிகள் வேண்டும். இவற்றை ஓர ஒர ஆனந்தம் அதிகரிக்கும். இத்தகைய மனன ஆனந்தம் நிர்விகல்ப சமாதியில் மறைந்து போகின்றது.

 என்றும்என் அன்பு நிறைந்த
    பராவமுது எய்துவ தாகாதே (அடி-4) 

பொருள் : பரமானந்தத்தில் திளைத்திருப்பது என்பதும் அதீத நிலையில் இல்லை. ஏனென்றால் அதீதம் என்பது ஆனந்தத்திற்கும் அப்பாற்பட்டது. அதில் சுத்த சிவம் தன்னில் தானாய் எஞ்சி நிற்கின்றது. -