பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268 மாணிக்கவாசகர்



அரசின் செல்வத்தை எடுத்துச் சென்றார். வழியில் சிவகுருவையும் சிவனடியார்களையும் சந்தித்தார். தம் கடமையை மறந்துவிட்டு அன்பர் பணிவிடையில் அரசன் செல்வத்தையெல்லாம் செலவிட்டார். அந்தப் பணிவிடை அவருக்குப் பரமானந்தத்தை ஊட்டியது. அதற்காக அரசன் அவருக்குக் கொடுத்த தண்டனையை அமைதியாக ஏற்றுக் கொண்டார். அன்பர் பணி செய்ததில் பெற்ற இன்பநிலை அந்த அல்லல்களையெல்லாம் விழுங்கி விட்டது. உலக இன்னல் அவருக்கு இன்னலாகத் தோன்றவில்லை. அன்பர் பணியில் பெற்ற ஆனந்தம் அவ்வளவு பெரியது; மகத்தானது. அத்தகைய பேரானந்தமும் சமாதி நிலையில் நிர்மூலமாகி மறைந்து போகின்றது.

               பாடல்-5
  காதல் செயும்அடி யார்மனம்
     இன்று களித்திடும் ஆகாதே (அடி-2)

(காதல்செயும் - பக்தர்களிடத்து பக்தியை வளர்க்கின்ற)

பொருள் : பக்தர்களிடத்து பக்தர்கள் வைக்கும் அன்பு ஒப்பற்றது. அதில் வருகின்ற ஆனந்தம் பரமானந்தமாகின் றது. நிர்விகல்ப சமாதியில் அந்த ஆனந்தம் மறைந்து போகின்றது.

விளக்கம் : சிறுவர் பலர் கூடி விளையாடுவதுண்டு. விளையாட்டில் மகிழ்ச்சி உச்ச நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பொழுது பெற்ற தாய் வந்து கூப்பிட்டாலும் விளையாட்டை புறக்கணித்துவிட்டுத் தாயின் பின் செல்லச் சிறுவன் ஒருவன் இசைவதில்லை. பக்தர்களுக்கோ பக்தர் கூட்டுறவு அவ்வளவு இனிமை வாய்ந்தது.


மாணிக்கவாசகருக்குக் குருவின் கருணையும் அடியார் இணக்கமும் சேர்ந்து அமைந்தன. அவரை ஆட்கொண்ட பிறகு முதலில் குரு மறைகின்றார். ஆட்கொண்டவரிட