பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270 மாணிக்கவாசகர்



வானவூர்திகள், இராக்கெட்டு விமானங்கள், அம்புலியை அடைதல், அணுவைப் பிளந்து அரிய ஆற்றலை வெளிப்படுத்தி அற்புத விளைவுகளை உண்டாக்கும் நீரியகுண்டுகள், அணுகுண்டுகள் இயற்றல், வானொலி, தொலைக்காட்சி, இன்சாட் சாதனம், அரிய முறைகளில் அறுவை சிகிச்சை போன்றவை சித்தியில் சேர்கின்றன.

மனிதன் தன்பால் உள்ள பூதங்களையும் அடக்கி ஆளுவதால் பெறுகின்ற திறமைகளே சிறப்பாகச் சித்திகளாகின்றன. நீர்மேல் நடப்பது,நெருப்பில் இனிதாக அமர்ந்திருப்பது, பூமியில் புதையுண்டு சாகாதிருப்பது, வானத்தில் சஞ்சரிப்பது, காயம் கட்புலனாகாமல் மறைந்திருப்பது, பரகாயப் பிரவேசம் பண்ணுவது, கல்லைக் கற்கண்டாக்குதல், மணலை சருக்கரையாக்குதல், திடீரென்று வாசனைத் திருநீற்றைத் தருவித்தல்-இவை போன்றவையும் சித்திகளாகின்றன.

ஆன்ம சாதகர்களுக்கு சித்திகள் வாய்ப்பதுண்டு. அவற்றில் மயங்கி ஈடுபடுபவர்கள் முன்னேற்றம் அடைவதில்லை. பலர் அவற்றால் கீழ்மையுறுகின்றனர். நல்லறிஞர்கள் சித்தியைக் கருத்தில் வாங்குவதில்லை. நிர்விகல்ப சமாதி அடையப் பெற்றவர் சித்தியால் வரும் ஆபத்திற்கு அப்பாற்பட்டவராகின்றார். "சினமிறக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும், மனம் இறக்கக் கல்லார்க்கு (பராபரம்-169) சிவசொரூபம் வாய்க்காது.

             பாடல்-6 
  பொன்னிய லுந்திரு மேனிவெண்
     நீறு பொலிங்திடு மாகாதே (அடி-1) 

(பொன் இயலும் . பொன் போல் விளங்குகின்ற;பொலிந்திடுதல் - பிரகாசித்தல்)

பொருள் : சகுண பிரம்ம தரிசனம் பக்தனுக்கு பரமானந்தத்தை ஊட்டுகின்றது. இஷ்டமூர்த்தியின் தரிசனத்திற்கும் மேலானது நிர்விகல்ப சமாதி.