பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைச்சர் வாழ்வு 11



அறிவும் பெற்றவர்கட்கு மிக அரியது, முடியாதது என்பது ஒன்றில்லை; எல்லாவற்றையும் எளிதில் முடிக்கும் திறமை அமைந்துவிடும். வாதவூரர் அமைச்சரான பிறகு பாண்டியனின் ஆட்சி அல்லல் இன்றிச் சிறப்புடன் நடைபெற்றது. எதிர்பாராமல் கிடைத்த இப்பணியைத் தெய்வப்பணியாக நடத்தினார். புதிதாக அமைந்த போகத்தால் வாதவூரருக்குத் துளிகூட இறுமாப்பு ஏற்படவில்லை; தற்பெருமையும் கொள்ளவில்லை. கடமை, கண் ணியம் , கட்டுப்பாடு இவற்றைப் பெரிதாகக் கருதிச் செங்கோல் சிறப்புற நடைபெற வேண்டிய அனைத்தையும் குறைவறச் செய்தார். மக்கட்கு நேரிடும் இடுக்கண்களைத் தீர்த்தார். நாட்டில் ஏற்படும் பஞ்சம் நீங்க அறச்சாலைகள் அமைய ஏற்பாடுகள் செய்தார்.

   தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
   சொல்லலும் வல்ல தமைச்சு’ 1 

என்ற வள்ளுவர் காட்டும் ஒளியில் காரியங்களை ஆராய்ந்து செய்தார்; அவை திறனுடன் முடியும் உபாயங்களை மேற் கொண்டார்.

    செய்வானை நாடி வினைகாடிக் காலத்தோ(டு) 
    எய்த உணர்ந்து செயல்’ 2 

என்ற குறள் விளக்கு நல்வழிகளைக் காட்டியது. கண்ணும் கருத்துமாக அரசியலில் தன்னை உட்படுத்திக் கொண்டார். இவர் அமைச்சராய் நின்று செயலாற்றியதை,

     அண்ணலரி மருத்தனுக்(கு)
            அடல்வாத ஓர் அமைச்சர் 
     கண்ணுமிகு கவசம்போல்
            காரியம்செய் தொழுகுவார்

1. குறள் . 634 (அமைச்சு) 2. டிெ 516 (தெரிந்துவினையாடல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/29&oldid=1012177" இலிருந்து மீள்விக்கப்பட்டது