பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 273



இதனை இன்னொரு சான்றாலும் விளக்கலாம். சாத்திரத்தின் சொரூபம் வியாசமுனிவர்; பண்பட்ட சீடனது சொரூபம் அவருடைய பிள்ளையாகிய சுகப்பிரம்மம். நிறை ஞானியின் சொரூபம் இராஜரிஷியாகிய ஜனக மகாராஜன். ஞானதீட்சை பெறுதற்கு அந்த நிறைஞானியிடம் தந்தை வியாசர் தனயன் சுகப்பிரம்மத்தை அனுப்புகின்றார். தீட்சை பண்ணி வைப்பதற்கு முன்னதாகவே வழக்கத்தில் இருந்து வந்த குரு தட்சினையைச் செலுத்தும்படி சனகர் சுகரிடம் ஆணையிடுகின்றார். அதற்குக் காரணம் யாதோ என்று அருகில் இருந்த இருடிபுங்கவர் சிலர் வினவுகின்றனர். சனகர் இவர்கட்கு விளக்கம் தருகின்றார். சுகப்பிரம்மத்திற்கு பிரம்மோபதேசம் செய்தவுடனே அவருக்கு நிர்விகல்ப சமாதி கூடிவிடும். அதன் விளைவாக குரு-சீடன் என்ற பேதம் அழிந்து பட்டுப் போகும். குருதட்சினை செலுத்து வதைப்பற்றிய எண்ணமே பிறகு எழாது என்பது. இது நிர்விகல்ப சமாதியைப் பற்றிய உண்மையாகும். மணிவாசகரும் தான் அடியோம் உடனே உயவந்து தலைப் படும் ஆகாதே’ (அடி-3) என்று ஈண்டு இயம்புகின்றார்.

           பாடல்-7
  பல்லியல் பாய பரப்பற
     வந்த பராபர மாகாதே  (அடி-2) 

(பல் இயல்பு ஆய - பல இயல்புகள் வாய்ந்த; பரப்பு அறவந்த - மனத்தின் சலனம் ஒடுங்குமிடத்துத் தென்படுகின்ற)

பொருள் : அசையாத தூய மனத்தில் ஈசனது பலப்பல விபூதிகள் மிளிர்கின்றன. மனாதீதத்தில் அத்தகைய தெய்விக அநுபவங்கட்கு அவகாசம் இல்லை.

விளக்கம் : காற்று அடிப்பதனால் தரையிலுள்ள தடாகம் ஒன்று

அலைவீசிக் கொண்டு உள்ளது. அதனால்