பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 273



பொருள் : புறத்தில் அழகான வடிவங்களைக் கண்டு அவற்றிற்கு வசப்படுதல் நிர்விகல்ப சமாதிக்குப் பிறகு நிகழாது.

விளக்கம் : சீவான்மனுக்கு சிவ வியக்தியானது பல பிறவிகளில் தொடர்ந்து வருவதற்குக் காரணம் ஒன்று உண்டு. அகத்தில் இருப்பதை அவன் புறத்தில் தேடித் திரிகின்றான். ஆதலால் அகத்தில் இருப்பதைப் புறத்தில் தேடியலைபவன் சீவான்மன் என்று அவனுக்கு விளக்கம் கொடுக்கலாம்.

நிலையற்ற வாழ்வை கிரந்தர வாழ்வாகத் திருத்தியமைக்க சீவன் பெருமுயற்சி எடுத்துக் கொள்ளுகின்றான். அதற்காக அவன் உணவைத் தேடித் திரிகின்றான். குடியிருக்க வசதியான இல்லம் அமைத்துக் கொள்ளு கின்றான். குளிர்ச்சி, வெப்பம் ஆகிய இயற்கையின் இயல்பை மீளுவதற்கேற்ற உடைகளை அணிகின்றான். இப்படி வாழ்வை நீடித்து வைத்திருக்க அவன் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் பெரிதும் வெற்றியடைகின்றான். ஆயினும் மரணம் வந்து அவனைத் தோற்கடித்து விடுகின்றது. மேலும் பிறவி எடுத்து வந்து அதே முயற்சியை மீண்டும் செய்கின்றான், எண்ணிறந்த பிறவிகள் எடுத்து இளைத்துப் போன பிறகு, தான் தேடும் நித்திய வாழ்வு தன்னிடத்திலேயே உள்ளது என்பதை அநுபூதியில் அறிகின்றான், ஆன்மா சத் பொருள்: அஃது அழிவற்றது. அடுத்து அவன் நாடுவது ஆனந்தம். இதை அவன் புறவுலகில் தேடியலைகின்றான். தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பொருளையும் சோதனை செய்து பார்க்கின்றான். எது ஆனந்தத்தைக் கொடுக்கின்றதோ அதே பொருள் பின்பு துக்கத்தையும் தருகின்றது. இப்படி உலகமெல்லாம் தேடித் திரிந்து விட்டுத் தான் தேடுகின்ற ஆனந்தம் தன்னிடத்