பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276 மாணிக்கவாசகர்


திலேயே உள்ளது என்பதை அறிந்து கொள்ளுகின்றான். கஸ்தூரி மானிடத்துக் கஸ்தூரி அதன் பருவத்தில் விளைகின்றது. அந்த மணம் மானுக்கு மிக விருப்பமானது. ஆதலால் அது அப்பொருளை நாடி அலைகின்றது. அப்படி அலையும் காலமெல்லாம் அந்த மணத்தை அது தன்னிடத்திலேயே வைத்துக் கொண்டுள்ளது. சீவான்மன் ஆனந்தத்தை நாடி அலைவதும் அத்தகையதாகும்.

சீவான்மாவின் மற்றோர் இயல்பு அழகைப் போற்றுவதாகும். அழகுப் பொருள்கள் எல்லாம் அவன் கவனத்தைக் கவர்கின்றன. அழகை அவன் நன்கு சுவைக்கின்றான். அதை அவன் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முயல்கின்றான். சொந்தமாவதற்கு முன்பு அழகாகத் தென்பட்டது சொந்த மானவுடனே சிறிது அழகை இழக்கின்றது. நாளடைவில் அஃது அவனுக்கு அழகற்றதாகின்றது. இங்ஙனம் அழகைநாடி அலைவது ஓய்வில்லாத முயற்சியாகின்றது. எத்தனை எத்தனையோ வடிவங்கள் அழகுடையனவாகத் தென்பட்டு அவனை மயக்குகின்றன. அவற்றுள் எத்தனையோ வடிவங்கள் தாமே அழகை இழந்து அவன்பால் அருவருப்பையூட்டு கின்றன. எத்தனையோ பொருள்கள் அவன் மனமாற்றத்தை முன்னிட்டு அழகை இழந்தவை போன்று காட்சி கொடுக்க லாயின!

ஆன்ம சாதனத்தில் ஈடுபடுகின்ற சீவான்மன் அழகு அனைத்தையும் தனது வழிபடு தெய்வத்திடத்துக் காண்கின்றான். பிறகு தனது வழிபடு தெய்வமே அழகுப் பொருள்கள் அனைத்துமாக உள்ளது எனக் காண்கின்றான். அழகுத் தெய்வமே அகத்திலும் புறத்திலும் மிளிர்வது அவனுக்குப் பரமானந்தத்தை ஊட்டுகின்றது, சாந்தம் சிவம் சுந்தரம் பிரம்மம் என்னும் ஆப்தவாக்கியம் அவனுக்கு அநுபூதியாக அமைகின்றது. சவிகல்ப சமாதியில் இஷ்ட மூர்த்தியை சுந்தர சொரூபியாகக் கண்டு களித்திருப்பது ஒருவித அநுபூதி