பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 மாணிக்கவாசகர்



உயிர் வகைகளுள் நான்கு சாதிகள் இருப்பது போன்று காலச் சக்கரத்தில் நான்கு யுகங்கள் உள்ளன. அவை கிருத யுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என வகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் கிருதயுகம் எல்லாவற்றிலும் உயர்ந்தது. அதில் வாய்த்துள்ள எல்லா விதமான நிறை நிலைகளுக்கிடையில் ஒரே ஒரு குறைபாடு உள்ளது. கிருத யுகத்தில் ஆன்ம சாதகனுக்கு முக்தி கிடைப்பது அரிதிலும் அரிது.

கிருதயுகத்திற்கு ஒப்ப பிராமணனுக்கு ஒர் இடையூறு உண்டு. சாதியில் மேலே வருவதற்கு ஒப்ப சாதியபிமானம் என்னும் உபாதி மனிதனிடம் வலுக்கின்றது. அந்த உபாதி பிராமணனிடத்தில் உச்சநிலையை அடைகின்றது. பெருங் காயம் வைத்துள்ள பாண்டத்தை எவ்வளவுதான் துலக் கினாலும் பெருங்காய நாற்றம் அப்பாண்டத்தை விட்டு அகலாது. அங்ஙனம் 'நான் பிராமணன்' என்னும் உபாதி எளிதில் அகலாது. வாழ்வின் ஆரம்ப நிலையில் அந்த உபாதி முற்றிலும் வேண்டப்பெறுகின்றது. ஆனால் சமாதியில் சீவ உபாதியை முற்றிலும் ஒழிக்க முயலுங்கால் அது குறுக் கிட்டு இடைஞ்சல் செய்யும், இந்த உபாதியை ஒழிக்க இராமகிருஷ்ணர் ஆறுமாத காலம் அற்புதமான சாதனம் புரிந்ததாக அறிகின்றோம். நள்ளிரவில் தட்சினேசுவரத்து அருகில் இருக்கும் சேரிக்குச் செல்வார். தம் தலை முடியால் அவ்விடத்தைத் துடைத்துத் தூய்மையாக்குவார். "தாயே, மக்களால் ஒதுக்கப்பெற்றவர்களும் உன் குழந்தைகளே. நான் அவர்களைவிட உயர்ந்தவன் என்னும் உபாதி என் உள்ளத்தைவிட்டு அறவே அகல வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து பணிவிடை புரிந்து அவர் தமது மனப்பான்மையைத் திருத்தி அமைத்தார். அந்த உபாதியை ஒழித்தற்கு இராமகிருஷ்ணர் அத்தகைய அரும்பாடுபட்டார் என்பதிலிருந்து அஃது எவ்வளவு விபரீத வலிவு படைத்தது