பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருத்தில்லை அருளிச் செயல்கள்-2 281



சங்கங்களுள் தொண்டர் குழாம் மிகவும் மேலானது. அதில் தெய்விக சாந்நித்தியம் சிறப்புற்று மிளிர்கின்றது. அதற்குச் செய்யும் சேவை சிவசேவைக்கு நேர். அதில் வைத்திருக்கும் பற்றுதல் தெய்வப்பற்றுக்கு ஒப்பானது. தொண்டர் குழாம் ஒன்றுக்கு ஆத்மசாதகர் ஒருவர் அன்போடு உழைக்கின்றார். அவர் நிர்விகல்ப சமாதி அடையப் பெறுகின்றார். அது கலைந்த பிறகு அவர் பழைய அன்போடும் ஆதரவோடும் அடியார் சேவைக்கு வருகின்றாரா என்பது கேள்வி. நிர் விகல்ப சமாதி அடைந்தவரது பாங்கு அறவே மாறி விடு கின்றது. ஒரு பாலன் போன்று அவர் ஆய்விடுகின்றார். ஆசை ஒன்றும் அவரிடத்து இல்லை. கர்மத்துக்குத் தாம் கர்த்தா என்ற எண்ணம் அவரை விட்டு அறவே அகன்று போகின்றது. அபேதத்தில் அவர் நிலைத்திருக்கின்றார். யாருக்கு உழைத்தல், யாரிடமிருந்து விலகியிருத்தல் என்னும் பாகுபாடு அற்றவராகின்றனர். அவரைக் கொண்டு ஏதாவது வினை நிகழ்ந்தால் அது முற்றிலும் சிவன் செயல் ஆகும்.

  சீரடி யார்கள் சிவானுப
     வங்கள் தெரிந்திடும் ஆகாதே (அடி- 3)

பொருள் : சவிகல்ப சமாதியில் உ ண் டா கி ன் ற எண்ணிறந்த மூர்த்தி தரிசனங்களும் இணக்கங்களும் நிர்விகல்ப சமாதியில் ஒரே அகண்ட சச்சிதானந்த சிவ சொரூபமாய் நிலைமாறி விடுகின்றன.

விளக்கம் : சீர் அடியார்களுள் சீகாழிச் செல்வர் ஞான சம்பந்தர் சிவனைத் தந்தையாகவும் தம்மை ஒரு ஞானச் செல்வராகவும் கருதிவந்தார். (மகன்மை நெறி). இத்தகைய இணக்கத்திற்கு நிர்விகல்ப சமாதியில் இடம் இல்லை. அப்பர் பெருமான் தம்மை அடிமையாகவும் கடவுளை ஆண்டானாக வும் கருதிவந்தார் (அடிமை நெறி). நிர்விகல்ப சமாதியில் இப்படிப் பட்ட உறவு பொருளற்றது. சுந்தரர் வன்றொண்ட ராயிருந்து தேவ தேவனைத் தோழனாகக் கருதி அவரிட