பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 மாணிக்கவாசகர்




  தண்ணளிசெய் தவணியெலாம்
       தன்கிளைபோல் குளிர்தூங்க
  வண்ணமதிக் குடைநிழற்றி
       முறைசெய்து வாழுநாள்."   3

என்று காட்டுவார் பரஞ்சோதி முனிவர். நன்னெறியில் செலுத்தலால் அரசனுக்குக் கண்ணாகின்றார்.தெய்வத்தால் வரும் ஏதங்களைச் சாந்தியாலும் மக்களால் வரும் இடையூறுகளை நால்வகை உபாயங்க்ளாலும் பாதுகாத்த லால் அரசனுக்குக் கவசம் போலாகின்றார்.

இயல்பாகவே சமய நெறியில் சார்ந்து நிற்கும் இவருக்கு மதுரைச் சூழ்நிலை சாதகமாக அமைந்து விடுகின்றது. மதுரையின் புகழுக்குத் தமிழ்ச் சங்கமும், மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலும்தான் முதற்காரணம் என்பதை நாம் அறிவோம்.மீனாட்சி அம்மன் கோயிலின் மிகப் பெரிய வானளாவ நிற்கும் ஒன்பது கோபுரங்களும், அவற்றின் மீது புராணக் கதைகளையெல்லாம். விளக்கும் பாங்கில் கொத்துக் கொத்தான அழகிய சிற்ப வடிவங்களும், கோயிலுக்கு உள்ளே அமைந்த உறுதியான கற்றூண்களும் அவற்றில் கைபுனைந்தியற்றிய அற்புதமான சிற்பவடிவங்களும், பண்டைத் தமிழரின் கலைச்சிறப்பையும் நாகரிக முதிர்ச்சியையும் பறைசாற்றிக் கொண்டுள்ளன. இவையெல்லாம் தென்னவன் பிரம்மராயரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திருக்க வேண்டும். மதுரையில் அமைதியாக இருந்து கொண்டு மீனாட்சியம்மனையும் சொக்கலிங்கப் பெருமானையும் வழிபடுவதற்குத் தம் அமைச்சர் பதவியால் சந்தர்ப்பம் வாய்த்ததற்கு அவர் மனம் உள்ளுற மகிழ்ச்சிப் பெருக்கால் திளைத்திருக்க வேண்டும். நாடோறும் தவறாமல் அம்மையையும் அப்பனையும் வழிபட்டு வருகின்றார் வாதவூரடிகள்.


3 பரஞ்சோதி - வாதவூரடிகளுக்கு.9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/30&oldid=1012180" இலிருந்து மீள்விக்கப்பட்டது