பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாசகம்-பதிகமுறை வைப்பு 283



பத்து, அதிசயப் பத்து, பிடித்த பத்து, அற்புதப் பத்து, சென்னிப் பத்து, திருக்கழுக்குன்றப் பதிகம் என்ற பெயர்கள் அவ்வப்பகுதியில் பாடல் இறுதியில் வரும் சொல்லாலும், இறுதியடியில் அமைந்த சொல்லாலும் அமைந்த பெயசர்களாகும் என்பதைத் தெளியலாம். திருப்படையாட்சி என்பது அப்பகுதியில் முதற்பாட்டில் மூன்றாவது அடியில் வரும் படையாட்சி' என்ற சொல்லால் சூட்டிய பெய ராகும். செத்திலாப் பத்தும் அத்தகையதே. இவ்வாறு ஒரு பகுதியில்வரும் முதற் சொல்லாலும், இறுதிச் சொல்லாலும் செய்யுளிடையில் வரும் சொல்லாலும், அவ்வப் பகுதிக்குப் பெயர் சூட்டிப் பிற்காலப் புலவோர்க்கு வழிகாட்டி யுள்ளார் மணிவாசகர், ஏனைய தலைப்புகள் பொருள் நோக்கத்தால் அமைந்தவை. மகளிர் விளையாட்டுகள் : தலைப்புகளில் சில மகளிர் விளையாட்டுகளாக அமைந்துள்ளன. இங்ங்ணம் அமைந் துள்ளவை திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொற் சுண்ணம், திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி திருவுந்தியார், திருத்தோணோக்கம், திரும்பொன்னுரசல் என்ற ஒன்பதுமாகும். இத்தலைப்புகளை விளக்குமிடத்து இவ்விளையாட்டுகள் விளக்கம் பெறுகின்றன. மகளிரிடத்தில் சமய உணர்வு பரவச் செய்து எல்லோர்க்கும் உய்வு நெறி காட்ட வேண்டும் என்ற கருத்துடையவர் மணிவாசகப் பெருமான். மெல்லிய இயல்புடைய பெண்டிர் மனத்தைச் சமய உணர்வில் பதியச் செய்துவிட்டால் பின்பு ஆடவர்கள் அவர் வழிச் சென்று சமயப் பற்றுடையவர்களாவர் என்ற கருத்தில் பெண்டிற்கே உரிய விளையாட்டுகளைத் தம் பத்தி நெறியில் அமைத்துப் பாடியுள்ளார்.

பதிகக் கருத்துகள் : அச்சிட்ட திருவாசகப் பதிப்பு களில் பதிகக் கருத்துகள் மிகச் சுருக்கமாக ஒவ்வொரு தலைப்பின் கீழும் எழுதப்பெற்றுள்ளன. ஆனால் அவை