பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாசகம்-பதிகமுறை வைப்பு 287



1. அற்புதப் பத்து என்ற பதிகத்தைப் பாடுகின்றார். குருநாதனைத் தரிசித்து அவரால் திருவடி தீட்சை செய்யப் பெறுகின்றார். அதனை ஏற்றுக் கொண்ட சென்னியை வியந்து,
2. சென்னிப் பத்து பாடுகின்றார். இறைவன் கருணையை வியந்து,
3. அச்சோப் பத்து அருளுகின்றார். கூட இருந்த அடியார்களைச் சுட்டிக் காட்டி,
4. அதிசயப் பத்து பாடுகின்றார். குருநாதன் மறையவே உளம் கவன்று,
5 கோயிற் பத்து
6. புணர்ச்சிப் பத்து
7. செத்திலாப் பத்து
8. பிரார்த்தனைப் பத்து
9. ஆசைப் பத்து
10. உயிருண்ணிப் பத்து
11. திருப்புலம்பல்
12. வாழாப் பத்து
13. எண்ணப் பத்து

ஆகிய பதிகங்களை அருளிச் செய்கின்றார். பின்னர் திருப்பெருந்துறையை (நகர்) அடைந்தபோது,

14. திருவம்மானை
15. திருப்பொற்சுண்ணம்
16. திருக்கோத்தும்பி
17. திருத்தெள்னேனம்
18. திருப்பூவல்லி
19. திருவுக்தியார்
20. திருத்தோனோக்கம்
21. திருவெம்பாவை
22. திருச்சதகம்

ஆகியவற்றைப் பாடுகின்றார். பாண்டிய மன்னன் குதிரைகளை விரைவில் கொண்டு வரும்படி ஒலையனுப்பியபோது அடிகள் வருந்தித் திருப்பெருந்துறை கோயிலுட் சென்று,

23. திருப்பள்ளி எழுச்சி பாடுகின்றார்.