திருவாசகம்-பதிகமுறை வைப்பு 289
இனி, திருவாதவூரர் புராணத்தில் உள்ள விவரங்களைக் காட்டுவேன்.
திருப்பெருந்துறை :
இங்குக் குருந்த மரத்தடியில் குருநாதருக்காகத் தெய்வ பீடிகை அமைத்து வழிபட்டு வந்த நாட்களில் முதலில்,
1. சிவபுராணம் ஒதப் பெறுகின்றது. அடுத்து சோதிப் பெருமான் வந்து அருள் செய்யும் அற்புதத்தை அறியேன் என்று,
2. அற்புதப் பத்து அருளப் பெறுகின்றது. இறைவன் அடி களை ஆட்கொண்ட அதிசயத்தைக் கண்டோம் என்று,
3. அதிசயப் பத்து ஒதப் பெறுகின்றது. "மின்னார் செஞ்சடை அண்ணல் என் நெஞ்சைக் குழைத்தான்’ என்று கூறிய வண்ணம்,
4. குழைத்த பத்து பிறக்கின்றது.
குருநாதன் திருவடி என் சென்னியின்மீது திகழ்கின்றது என்று சொல்லும் முறையில்,
5. சென்னிப் பத்து பாடப் பெறுகின்றது. இறைவனைக் காண ஆசைப்பட்டதாகக் கூறும் போக்கில்,
6. ஆசைப் பத்து அருளிச் செய்யப் பெறுகின்றது. காலம் கிட்டிக்க உய்கிலேன் என்று கூறும் முறையில்,
7. வாழாப் பத்து என்பதையும், "வருந்தி உனக்கு அடைக்கலம்' என்று கேட்கும் முறையில்
8. அடைக்கலப் பத்து என்பதையும், செயலற்ற நிலையில் 'இன்னும் சாகவில்லையே’ என்று நுவலும் முறையில்,
9. செத்திலாப் பத்து என்பதையும், 'நின் திருவடியை அடைதல் என்றோ?' என்று சொல்லும் முறையில்,
மா-19