பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாசகம்-பதிகமுறை வைப்பு 291



24. பிடித்தபத்து அருளிச் செய்கின்றார், முதுகுன்றம் 2 முதலான தலங்களை லணங்கிக் கொண்டு திருவண்ணாமலை வருகின்றார். இங்கு, 25. திருவெம்பாவை 26. திருவம்மானை

என்ற இரண்டு பனுவல்கள் அருளிச் செய்யப்பெறுகின்றன. திருவண்ணாமலையிலிருந்து திருக்கழுக்குன்றம் வந்து,

27. திருக்கழுக்குன்றப் பதிகம் பாடியருளுகின்றார். இங்கிருந்து புறப்பட்டுத் தில்லையை அடைகின்றார். தில்லைச் சிற்றம்பலவன் ஆசிரியத் திருமேனிகாட்டி அருள் புரியக் கண்டு ஆனந்தக் கண்ணிர் சொரிய, 28. கண்ட பத்து பாடி ஒவியம்போல் அசைவற்று நிற் கின்றார். தில்லையில் தங்கியிருக்கும் நாட்களில்,


2. முதுகுன்றம் : (விருத்தாசலம்) விருத்தாசலம் டவுன் ரோடு என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1/2 கல் தொலைவு . கோயில் சில அடிகளே உயர முள்ள கற்பாறையின் மீதுள்ளது. இதற்கே பழமலை (விருத்தாசலம்) என்று பெயர். தல விநாயகர் (ஆழத்துப் பிள்ளையர்) பல படிகள் இறங்கிச் சென்ற் சேரும் பள்ளமான இட்த்திலுள்ளார். இங்கிருந்து தண்ணீர் வெளிச் செல்ல வழி உள்ளது. திருக்கோயிலுக்கெதிரே மணிமுத்தாறு உள்ளது. சுந்தரர் இத்தலத்தில் பதிகம் பாடி 12,000 பொன் பெற்று இந்த ஆற்றிலிட்டு ஆரூர்க் குளத்தில் எடுத்தார். காசியில் இறந்தால் முத்தி என்பது போல இத்தலத்தில் இறந்தாலும் சொரூப முக்தி கிடைக்கும் என்று கந்தபுராணம் கூறுகின்றது. (வழிநடைப்படலம் காண்க). துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் முதலிய பெரியோர்கள் இத்தலத்தில் பெரிதும் ஈடுபட்டவர்கள். மாசி மிகத் திருவிழாவில் 6-ஆம் நாள் பகலில் நடைபெறும் இடப உற்சவம் புகழ்பெற்றது. காசியிலும் வீசம் பெரியதால் விருத்த காசி என்றும் இத்தலம் கூறப் பெறுவதுண்டு.