பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292 மாணிக்கவாசகர்



29. குலாப் பத்து 30. கோயில்மூத்ததிருப்பதிகம்
31. கோயிற் பதிகம் 32. கீர்த்தித் திருவகவல்
33. திருவண்டப் பகுதி 34. போற்றித் திருவகவல்
35. திருப்பொற் சுண்ணம் 36. திருத்தெள்ளேனம்
37. திருவுக்தியார் 38. திருத்தோணோக்கம்
39. திருப்பூவல்லி 40. திருப்பொன்னுரசல்

ஆகிய பனுவல்களை அருளுகின்றார். இவற்றைத் தொடர்ந்து,

41. அன்னைப் பத்து 42. திருக்கோத்தும்பி
43. குயில் பத்து 44. திருத்தசாங்கம்
45. அச்சப் பத்து

ஆகிய உள்ளத்தை உருக்கும் செழும் பனுவல்களைப் பாடித் தில்லைநகர்ப் புறத்திலே இலைக்குடில் (பன்னசாலை) ஒன்று அமைத்து அதன்கண் தங்குகின்றார். புத்தரை வாதில் வென்று,

46. திருச்சாழல் 47. திருப்படையாட்சி
48. திருப்படையெழுச்சி 49. அச்சோப் பத்து
50. யாத்திரை பத்து

என்ற பதிகங்களை ஒதுகின்றார்.

51 பதிகங்களில் பண்டயா நான்மறை (48) காணப் பெறவில்லை. இதனை இப் புராணம் திருவெண்பாவில் (47) சேர்த்து ஒரு பகுதியாக வழங்குகின்றது. மற்றும் 'வெண்பா நாலேழ்' என இருபத்தெட்டு இருந்ததாகவும் உரைக்கின்றது. திருவாசகத்துள் வெண்பா யாப்பில் அமைந்த பகுதிகள் மூன்று. அவை திருத்தசாங்கம், திருவெண்பா, பண்டாய நான்மறை என்பன. இவை மூன்றிலும் இருபத்தெட்டு வெண்பாக்கள் உள்ளன. ஆனால் தசாங்கத்தைத் தனியே கூறி மீண்டும் இருபத்தெட்டு வெண்பாக் கூறுவதால் திருவெண்பா பதினொன்றும், பண்டாய நான்மறை ஏழும்