பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்கள் 30;


பெற்றது. ஆயினும் மார்கழித் திருவாதிரைத் திருநாளில் சிதம்பரத்தில் ஒதப்பெறுகின்றது. அதனால் சிறுவர் முதல் அனைவரும் கற்றிருப்பர். ஓதாமலே வந்த வித்தையாக அது பயின்று வந்திருக்கும் அதனால்தான் இப்பழமொழி வழங்கியிருக்க வேண்டும்.

3. தில்லை பாதி திருவாசகத்தில் என்பது, இன்னொரு பழமொழி. மணிவாசகப் பெருமான் பாண்டிய நாட்டில் மதுரையில் அமைச்சராக இருந்தும் பாதிக்குமேல் தில்லையைப் பற்றியதாக இருத்தலின் இப்பழமொழி எழுந்தது போலும் எனக்கருதலாம்.

நூலமைப்பு

திருவாசகம் சிவபுராணம் முதல் அச்சோபத்து ஈறாக ஐம்பத் தொருபகுதிகளாக 556 பாடல்களாக அமைந்துள்ளன். முதல் நான்கு பாடல்கள் கலிவெண்பா, நிலைமண்டிலம், இணைக்குறள், நிலை மண்டிலம் ஆகிய அகவல் யாப்பில் அமைந்துள்ளன. திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம் கோயில் மூத்ததிருப்பதிகம் கோயில் பதிகம், பிரார்த்தனைப் பத்து, குழைத்த பத்து, பண்டாய நான் மறை, யாத்திரைப்பத்து என்பன அந்தாதித் தொடையால் அமைந்துள்ளன. ஏனையவை அங்கனமின்றித் தனிப்பாடல்களின் தொகுதியாகக் கோக்கப் பெற்றுள்ளன. சில பதிகம் என்றும் சில பத்தென்றும் பெயர் பெற்றுள்ளன. இவற்றின் வேறுபாடுகள் அறியக் கூடவில்லை. அச்சோபதிகம் என்பது அச்சேர்ப்பத்தென்றும், திருப்பாண்டிப் பதிகம் என்பது, திருப்பாண்டி விருத்தம் என்றும், கோயிற்பதிகம் என்பது, கோயிற் பத்தென்றும் வழங்கி வருகின்றது. இப்பதிக முறைவைப்புகளையும் ஒவ்வொருபுராணமும் ஒவ்வொரு விதமாக வழங்குகின்றது. இவைபற்றிய விவரங்கள் பிறிதோர் இடத்தில் விளக்கப்பெற்றுள்ளன.6


6. இந்நூல் : 235 பக்கம் முதல்.