பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளிச் செயல்கள் 303



கடவுளாகிய சிவபெருமான் உலகெலாம் உய்ய ஆனந்தத் திருக்கூத்தியற்றியருளும் திருவருள் நிலையமாகிய தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் பரவிப் போற்றும் முறையிலமைந்த அகத்திணைக் கோவையாதலின் திருச்சிற்றம்பலக் கோவை' என்ற திருப்பெயர் பெறுகின்றது. திருவாசகப் பனுவலைப் போன்று இதுவும் வாதவூரடிகளின் மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனாகத் திகழ்தலால் இதனைக் கோவைத் திருவாசகம்’ எனச் சான்றோர் சிறப்பித்துப் போற்று கின்றனர்.

ஆழ்வார் பெருமக்களும் தேவார ஆசிரியர்களும் தன்னே ரில்லாத் தலைவனாகிய இறைவனை ஆருயிர் காதலனாக வும், அவனருள் விழைந்த ஆன்மாக்களை அம்முதல்வனைக் காமுற்று வருந்தும் தலைவியாகவும் கொண்டு அகப்பொருள் துறையமையப் பல திருப்பாடல்களைப் பாடியுள்ளனர். இம் முறையைப் பின்பற்றி மணிவாசகப் பெருமானும் சிவ பெருமானைத் தம் ஆருயிர்க் காதலனாகவும், அவனுடைய திருவடிப்பேரின்பத்தைப் பெற விரும்பும் தம்மைத் தலைவி யாகவும் கொண்டு நெஞ்சம் நெக்குருக்கவல்ல பல திருப்பாடல்களைப் பாடியுள்ளார்.

  மூலமாகிய மும்மலம் அறுக்கும 
  தூய மேனிச் சுடர்விடு சோதி 
   காதல னாகிக் கழுநீர் மாலை 
  ஏலுடைத் தாக எழில்பெற அணிந்து
                                 -கீர்த்தித்திரு. (111-114) 

என வரும் திருவாய்மொழியால் ஆண்டவனைத் தலைவ னாகவும், தம்மை அவனருளுக்கு ஏக்கமுற்று வருந்தும் தலைவியாகவும் கொண்டுள்ளமை தெளிவாகும். திருக்கோவையாரிலும் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் கொண்டுதான் பாடியுள்ளார்